BRAHMASTRA முதல் பாகம்.. சித் ஸ்ரீராம், ஜோனிதா குரலில் சிலிர்க்க வைக்கும் ‘தேவா தேவா’ பாடல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேசரியா என்கிற பிரம்மாஸ்திரா படத்தின் பாடல் உலகளவில் இசை ஆர்வலர்களைக் கவர்ந்தது. தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அனைத்து இசைத் தரவரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்த இந்த பாடலை தொடர்ந்து, சோனி மியூசிக் இப்படத்தின் மற்றொரு அழகான பாடலான 'தேவா தேவா' வை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

ஸ்டார் ஸ்டுடியோஸ், தர்மா புரொடக்ஷன்ஸ், ப்ரைம் ஃபோகஸ் மற்றும் ஸ்டார்லைட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படம்  பிரம்மாஸ்திரா : முதல் பாகம் - சிவா செப்டம்பர் 9, 2022 அன்று 5 இந்திய மொழிகளில் - ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட நட்சத்திரக் குழுவுடன் திரையரங்குகளில் வெளியாகிறது.  

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தேவா தேவா' பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல், காதல், வெளிச்சம், நெருப்பு, அவரது பிறப்பு மற்றும் அவரது மரணம் பற்றி பேசுவதாய் அமைந்துள்ளது.

ஆம், 'தேவா தேவா' பாடல், ஆன்மிகம் பற்றிய ஒரு பாடல் ஆகும்.  சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். ப்ரீதம் சக்ரவர்த்தி இசையமைக்க, மதன் கார்க்கி இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார்,  பாடலின் சக்திவாய்ந்த வரிகள் சிவன் உள்ளே இருக்கும் சக்தியைக் கண்டுபிடிக்கும் மந்திர தருணத்தை உள்ளடக்கியது.

கதாநாயகன் ரன்பீர் கபூர்  தனது கம்பீரமான திறன்களைக் கண்டறிவது போன்ற காட்சிகள்,  காதல், மற்றும் பக்தி ஆகியவற்றின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது தேவா தேவா பாடல்.  படத்தில் சிவாவின் கதாபாத்திர வளர்ச்சிக்கு இந்த பாடல் முக்கியமானது மற்றும் 'காதல், ஒளி மற்றும் நெருப்பு' என்ற கருத்துக்கு முழுமையான நீதியை வழங்குகிறது இந்த பாடல்.

பாடலைப் பற்றிய தனது அனுபவத்தை நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்து கொண்டார், அதில், “நான் பாடலை முழுமையாக ரசித்தேன், தனிப்பட்ட முறையில் பல நிலைகளில் அதை தொடர்புபடுத்த முடியும்.  இந்த பாடல் ஒருவரை ஆன்மீக ரீதியில் மிகவும் சக்திவாய்ந்ததாக உணர வைக்கிறது, மேலும் எல்லோரும் அதை உணர்ந்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

பாடல் காட்சி அமைப்பு குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர் அயன் முகர்ஜி, “பாடலை வெளியிட ஷ்ரவன் சோம்வரை விட சிறந்த நேரம் இருந்திருக்காது என்று நான் நினைக்கிறேன்.  இந்த நல்ல சந்தர்ப்பம் பாடலின் வசீகரிக்கும் மெல்லிசை மற்றும் ரன்பீரின் கதாபாத்திரத்தின் ஆன்மீக காட்சிகளுடன் ஒத்திசைகிறது - சிவன், அவரது நெருப்பு சக்தியை ஆராயும் பொழுது தேவா தேவா பாடல் படத்தில் வருகின்றது. கேசரியா பாடல் மூலம் எங்களுக்குக் தந்த அனைத்து அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.  மேலும் மக்கள் தேவதேவாவை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதைப்  நான் மிகவும் எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்.” என தெரிவித்தார்.

பிரம்மாஸ்திராவின் தேவா தேவா பாடல் பற்றி இசையமைப்பாளர் ப்ரீதம் கூறுகையில், “இந்த பாடலுக்கு நான் இசையமைக்கும்பொழுது ஒரு ஆன்மிக உணர்வு என்னுள் வந்தது.  'தேவ தேவா' மூலம், பாரம்பரிய மற்றும் பக்தி கூறுகளை முக்கியமாக வைத்து, இசையை நவீனப்படுத்தியுள்ளோம்.  இந்த ஆன்மீகப் பாடல் ஒரு உலக அனுபவத்தைத் தருகிறது.  இது அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என குறிப்பிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Brahmastra Deva Deva Amitabh Bachchan Ranbir Kapoor Alia Bhatt

People looking for online information on Alia Bhatt Nagarjuna, Amitabh Bachchan, Brahmastra, Deva Deva, Ranbir Kapoor will find this news story useful.