அஜித் பிறந்தநாளில் போனி கபூரின் VIRAL பதிவு…. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | தமன்னா பவுன்சராக நடிக்கும் புதிய PAN INDIA படம்.. அவரே வெளியிட்ட செம்ம சூப்பரான அப்டேட்!

நேர்கொண்ட பார்வை, வலிமை…

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

மூன்றாவது முறை…

இந்த இரு படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது தற்காலிகமாக ‘அஜித் 61’ என அழைக்கப்பட்டு வருகிறது.

அதையடுத்து படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகின. அஜித் 61 படம் ஒரு வங்கி சம்மந்தமான பிரச்சனையை மையமாகக் கொண்ட படம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரத்தை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

அஜித் பிறந்தநாளில் கிடைக்குமா அப்டேட்…

இந்நிலையில் இன்று அஜித்தின் 51 ஆவது பிறந்ததினம் அவரது ரசிகர்களால் சமூகவலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையடுத்து அஜித் 61 படத்தின் முதல் லுக் போஸ்டரோ அல்லது ஏதேனும் அப்டேட்டோ வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தயாரிப்பாளர் போனி கபூரின் பதிவு ஒன்று வைரலாகி உள்ளது. அந்த பதிவில் “ Built, Not bougt. Earned, not given. Hustled, not given. Rare, not average!” எனக் கூறியுள்ளார். இந்த பதிவு அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போல அமைந்துள்ளது. இந்த பதிவின் கீழ், ரசிகர்கள் பலரும் அஜித் 61 பட அப்டேட் கொடுங்கள் எனக் கேட்டு வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அஜித் பிறந்தநாளில் போனி கபூரின் VIRAL பதிவு…. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Boney kapoor viral status on Ajith birthday

People looking for online information on Ajith birthday, Ajith Kumar, அஜித், போனி கபூர், Boney kapoor will find this news story useful.