லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமம் குறித்த தகவல்களுக்கு விளக்கமளித்து போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.
Also Read | Nani30: செம Combo! நானியுடன் முதல்முறை கைகோர்க்கும் முன்னணி ஹீரோயின்!!
'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார்.
நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி வெளியானது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.
மேலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல திரைப்படங்களில் லவ் டுடே திரைப்படம், 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பரில் தெலுங்கிலும் இந்த படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர். இதனையடுத்து இந்த படம் தற்போது பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் போனி கபூர் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது என வதந்திகள் பரவின. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், "லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நான் வாங்கவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை." என போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.
தற்போது போனி கபூர், நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படத்தினை தயாரித்து வருகிறார். துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | இந்தா வந்துருச்சுல.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'பொன்னியின் செல்வன்'.. டைம் எப்போ?