NO MEANS NO நேர்கொண்ட பார்வையை கொண்டாடும் ஆடியன்ஸ்க்கு நன்றி - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த ஆக.8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரின் போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

'பெண் எப்படி இருந்தாலும் அவளிடம் அத்து மீற ஆணுஉனக்கு உரிமை இல்லை, அவள் 'நோ' சொன்னால் அதன் அர்த்தம் 'நோ' தான்' என்பதை அழுத்தமாக கூறியிருக்கும் பெண் உரிமையை மையமாகக் கொண்ட இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டரில், ‘நேர்கொண்ட பார்வைக்கு ஆடியன்ஸ் கொடுத்திருக்கும் அன்பும், வரவேற்பும் நெகிழச் செய்தது. அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Boney Kapoor overwhelmed by response on Ajith's Nerkonda Paarvai

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Nerkonda Paarvai will find this news story useful.