தல அஜித்குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தயாரித்தவர் போனி கபூர்.
![Boney Kapoor and Udhayanidhi Stalin meet together Boney Kapoor and Udhayanidhi Stalin meet together](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/boney-kapoor-and-udhayanidhi-stalin-meet-together-new-home-mob-index.jpg)
மறைந்த பிரபல இந்திய நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து வெளியான ‘பிங்க்’ படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தின் ரீமேக் படம்தான் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் கிளிம்ப்ஸ் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முன்னதாக இப்படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடலும் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து பிரபல இந்தி படமான ‘ஆர்டிகள் 15’ படத்தை தமிழில் போனி கபூர் தயாரிக்கிறார். இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.
சிவாங்கி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே பூஜையுடன் தொடங்கி நடைபெற்றன.
இந்நிலையில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ராகுல் இன்று நட்பு ரீதியாக சந்தித்தனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.