அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்? மர்ம நபரிடம் இருந்து வந்த பரபரப்பு போன்!.. நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று அன்பாகக் குறிப்பிடப்படும் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய விவகாரம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆம், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இப்படி கூறியுள்ளார்.   .

இதனை அடுத்து போலீஸாரின் சோதனையில் ஆனால் இது ஒரு புரளி என தற்போது தெரிய வந்துள்ளது. பிரபல நட்சத்திரங்கள் வீட்டை குறிவைத்து இப்படியான புரளிகளை சொல்லி போலீஸாருக்கு இதுபோன்ற அழைப்புகளை மேற்கொண்டு காவல் துறையினரின் நேரத்தையும் வீணடிக்கும் இது என்பது தெரியவந்துள்ளது.

ஆம், முன்னதாக மேலும் சில நட்சத்திரங்களின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட அதே நபர் தான் இந்த விவகாரத்திலும் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. 

தல அஜித் கடைசியாக நேர்கொண்ட பார்வையில் நடித்தார். இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் மற்றும் போனி கபூர் தயாரித்த இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணியில் உருவாகும் படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டுகள் ஓராண்டுகள் கழித்து அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன.

ஆனால் தற்போது கொரோனா தொற்றுநோய் நாடு முழுவதும் பரவிவருவது காரணமாக வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டுகள் கிடைக்க தாமதமாகின்றன. முன்னதாக, நடிகர் அஜித் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழான, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிவாரணத்துக்காக வங்கி பரிமாற்றம் மூலம் ரூ .25 லட்சம் நன்கொடை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "நாங்க டாம் அண்ட் ஜெர்ரி!"... இன்ஸ்டாகிராமில் விஜே ரக்‌ஷன் பகிர்ந்த க்யூட் ஃபோட்டோ!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bomb threat hoax ajith house chennai அஜித் குமார்

People looking for online information on Ajith Kumar, ThalaAjith will find this news story useful.