லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியானது மாஸ்டர் திரைப்படம்.
மாஸ்டர் படம் வெளியாகத் தொடங்கிய நேரத்தில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலை மாற்றப்பட்டு 100% இருக்கைகளுக்கு தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் தமிழ் சினிமாவுக்கு ஒரு புத்துயிர் பயந்தது போல் இருந்தது. ஏனென்றால் மாஸ்டர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக பல்வேறு தமிழ் திரைப்படங்கள் நேரடியாக தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி வருகின்றன.
இந்த நிலையில்தான் பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு அண்மையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், “முடிந்தவரை பேச்சு சுதந்திரத்தை சிறப்பான வழிகளில் தனித்துவமாக கதை சொல்வதில் இயக்குநர்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். இயக்குனர்கள் பலரும் மிகப்பெரிய துணிச்சலான விஷயங்களை பெரிய திரையில் கையாளுகின்றனர்.
எனது திரைப்படமான லூடோ அப்படித்தான். முதலில் பெரியதாக திட்டமிட்டேன். பின்னர் முடியவில்லை. படைப்பாற்றல் சுதந்திரத்துக்கும் அதை தவறாக பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது. ஓடிட்டு தளங்களிலும் அது இருக்கிறது.
சினிமா என்பது ஒரு சமூக அனுபவம். திரையரங்குகள் முழுவீச்சில் இயங்கத் தொடங்கிய பிறகு கண்டிப்பாக ரசிகர்கள் திரையரங்குக்கு மீண்டும் வருவார்கள் என்பது தெரியும். தென்னிந்தியாவில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை அழைத்து வந்தது. அப்படி ஒரு படம் பாலிவுட்டில் வரும்போது, அதாவது ஒரு பெரிய வெளியீடு வரும்போது இந்த நிலையை அது மாற்றும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அனுராக் பாசு பாலிவுட்டில் பர்ஃபி (2012), Life in A Metro(2007), Gangster(2006), Ludo(2020) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 'ஜெயலலிதாவையும் ஸ்ரீதேவியையும் இணைக்கும் அந்த 2 விஷயங்கள்'.. ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்!