நடிகர் சிம்ஹா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் "வசந்த முல்லை". இந்த திரைப்படம், பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வசந்த முல்லை வெளியாகிறது.
Images are subject to © copyright to their respective owners
அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வசந்த முல்லை'. இதில் பாபி சிம்ஹாவுகு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்துள்ளார். நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்திலும் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார்.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'நேரம்', 'பிரேமம்' படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா, நடிகை கஷ்மீரா பர்தேசி உள்ளிட்டோர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களது திரைப்பட பயணம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners
வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்த "வல்லவனுக்கு வல்லவன்" என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இரண்டு பெரிய படங்கள் இருந்த போதும் ஒரு வாரத்திற்குள் வேறு படத்தை ரிலீஸ் செய்வது சவாலான விஷயம் என்றும் அப்படி செய்ததற்கான காரணம் பற்றிய கேள்வியும் பாபி சிம்ஹாவிடம் முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாபி சிம்ஹா, "இந்த (வல்லவனுக்கு வல்லவன்) படத்தை டீமானிட்டைசேஷன் முன்னாடி முரளி சாருக்கு First Copy அடிப்படையில் நான் பண்ணி கொடுத்தேன். அதுக்கப்புறம் பாகுபலி வந்துச்சு, கிறிஸ்துமஸ் ரிலீஸ் பண்ணலாம்ன்னு பார்த்தோம். ஆனா, முரளி சாருக்கு சில சூழ்நிலைகள்னால ரிலீஸ் பண்ண முடியாம போச்சு. அப்படியே ஒரு ஏழு வருஷம் ஆயிடுச்சு. ரொம்ப போராடுனோம் அந்த படத்தை கொண்டு வர்றதுக்கு. அப்பவே ரிலீஸ் ஆயிருந்தா நல்ல ஒரு காமெடி ஃபிலிமா வந்துருக்கும். சூது கவ்வும் படத்துக்கு அப்புறம் நான் காமெடி ட்ரை பண்ணல. அந்த ஐடியாலஜில தான் இருந்தேன்.
அதுக்கப்புறம் ஜனவரி 20 ஆம் தேதி ரிலீஸ் பண்ணிக்கலாம், எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுன்னு சொல்லி கேட்டாரு. அவரோட காசு, அவரோட படம். அதனால நான் எதுவும் சொல்லல. அவர் மேல் ஒரு மரியாதை இருக்கு, அவர் போட்ட காசு இது. அது அவருக்கு திரும்பி கிடைக்கணும். அதைத்தான் நான் பெருசா பார்த்தேன். ஒண்ணு, ரெண்டு படம் போயிடுச்சுன்னா நம்ம எப்படியாவது எந்திரிச்சு வந்துடலாம். நல்ல டைரக்டர், நல்ல கதை இருந்தா திரும்பி வந்துடலாம். ஆனா ஒரு புரொடியூசர் பணம் நஷ்டம் ஆகிட்டு திருப்பி வர முடியலன்னா அது ரொம்ப கஷ்டம். சினிமா இண்டஸ்ட்ரிக்கே ரொம்ப கஷ்டமான விஷயம்" என தெரிவித்தார்.