VIDEO: அஜித் - விஜய் ரசிகர்கள் CALL பண்ணி நல்லா திட்டுவாங்க..! - மனம் திறந்த BLUE சட்டை மாறன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Youtube சினிமா விமர்சனங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் Blue சட்டை மாறன்.

Advertising
>
Advertising

இவரின் பாமரத்தனமான விமர்சனங்கள் சினிமா சம்பந்தபட்டவர்களை கோபமடைய வைத்தாலும், ரசிகர்களின் ஆதரவு கனிசமாக இவருக்கு உண்டு. இந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள திரைப்படம் ஆன்டி இண்டியன். இது இவருக்கு முதல் திரைப்படமாகும். ஆதம் பாவா இந்த படத்தை Moon பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். வரும் டிச-10 ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது. 

சென்சார் போர்டால் தடைவிதிக்கப்பட்டு, பிறகு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ‘ஆடுகளம்’ நரேன்,  ‘வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இதனை முன்னிட்டு நமது Behindwoods சேனலுக்கு இயக்குனர் மாறன் பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் குறித்த அரசியல், சினிமா பற்றிய கேள்விக்கும், அஜித் - விஜய் ரசிகர்களின் எதிர்வினை குறித்தும் பதில் அளித்துள்ளார். சில படங்களின் விமர்சனங்களுக்கு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் அலைபேசியில் அழைத்து தன்னை கடுமையாக திட்டுவார்கள் என்றும், குறிப்பாக அஜித் - விஜய் ரசிகர்கள் நன்றாக திட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் கமல் ரசிகர்களுக்கு திட்ட தெரியாது என்றும் கூறியுள்ளார்.

Blue சட்டை மாறனின் பேட்டி முழு வீடியோ இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

 

VIDEO: அஜித் - விஜய் ரசிகர்கள் CALL பண்ணி நல்லா திட்டுவாங்க..! - மனம் திறந்த BLUE சட்டை மாறன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Blue Sattai Maran Exclusive Behindwoods Interview

People looking for online information on Ajith Kumar, Anti Indian, Blue Sattai Maran, Vijay will find this news story useful.