தமிழில் தொடர்ச்சியாக வெளியாகும் திரைப்படங்களை பார்த்து அந்த திரைப்படங்களை பற்றிய விமர்சனங்களை முன்வைத்து வந்தவர் ப்ளூ சட்டை மாறன்.
இப்படி திரைப்படங்களை விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் ஒரு திரைப்படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்று பலரும் ஆர்வமாக ஏங்கியது உண்டு. அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தானே ஒரு திரைப் படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தம்முடைய திரைப்படத்துக்கு ஆன்ட்டி இந்தியன் என்கிற பெயர் சூட்டப்பட்டதாகவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து anti indian திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து இயக்கி முடித்த ப்ளூ சட்டை மாறன், இந்த திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்து இருந்தார்.
பின்னர் அந்த தணிக்கை சான்றிதழ் வழங்கும் பணி செய்யும் சென்சார் போர்டு ஆன்டி இந்தியன் திரைப்படத்தை தணிக்கை செய்வதற்கு புறக்கணித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுபற்றி ரிவைசிங் கமிட்டிக்கு தகவல் அனுப்பியதாகவும், மீண்டும் ஆண்டி இந்தியன் திரைப்படம் குறித்த நேரத்தில் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இப்படி ஆண்டி இந்தியன் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது தம்முடைய படக்குழுவில் ஒருவருக்கு நடந்த சோகத்தைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். தமிழ் திரைத்துறையில் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றியவர்கள் திரைப் பிரபலங்களின் நெருங்கிய உறவினர்கள் என பலரும் அடுத்தடுத்து கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழக்க நேரிடும் சம்பவங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகிவரும் anti indian திரைப்படத்தின் சவுண்ட் இன்ஜினியர் காலமாகி இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் அறிவித்துள்ளார்.