தமிழ் திரைப்பட சூழலில் பிரபலமாக அறியப்பட்ட விமர்சகர்களுள் முக்கியமானவர் ப்ளூ சட்டை மாறன்.
நீல நிற சட்டையை அணிந்து ஒவ்வொரு படத்தைப் பற்றியும் விமர்சனம் பண்ணும் இவருடைய பாங்கு பின்னாளில் இவருக்கு ப்ளூ சட்டை மாறன் என்ற பெயரை வாங்கித் தந்தது. இவரும் அந்த பெயரில் தொடர்ச்சியாக விமர்சனங்களை செய்துவந்தார்.
இத்தனை படங்களை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்ததுண்டு. இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு திரைப்படம் எடுக்கவிருக்கிறார் என்கிற தகவல் வந்தது. இந்த தகவல் அனைவரிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனின் படத்தினுடைய தலைப்பு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தமது திரைப்படத்திற்கு ஆன்ட்டி இந்தியன் என்கிற பெயர் சூட்டிப்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்த தலைப்பு சர்ச்சைக்குரிய வகையிலும் பரபரப்பாகவும் இருந்ததை அடுத்து, பலரிடையே இந்த படத்துக்கான ஆவல் அதிகரித்தது.
இதனிடையே ஆண்டி இந்தியன் திரைப்படம் சென்சார் போர்டினால் புறக்கணிக்கப் பட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன் மேற்கொண்டு ரிவைசிங் கமிட்டியை அணுக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பட ரிலீஸ், குறித்த நேரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் (நகரும் போஸ்டர்) வரும் ரமலான் பண்டிகையை ஒட்டி ரமலான் தினத்தன்று, ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக இயங்கிவரும் யூடியுப் தளத்திலேயெ வெளியிட உள்ளதாக அவரே அறிவித்திருக்கிறார்.
ALSO READ: பெரும் அதிர்ச்சி!!.. விவேக், பாண்டுவைத் தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!