ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்!'.. முதல் படத்துக்கே சென்சார் தடையா? என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படங்களை, அவை முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களாகவே இருந்தாலும் சற்றே கடுமையாக விமர்சிப்பதன் மூலம் பிரபலமானவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன்.

பல திரைப்படங்களை இப்படி விமர்சிக்கும் இவர் ஒரு படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்று காணும் ஆவல் இல்லாத திரைத்துறை பிரபலங்களோ, முன்னணி நடிகர்களின் ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக 'ஆன்டி இண்டியன்' எனும் தமது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

இப்படி ப்ளூ சட்டை மாறன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்துள்ளதாகவும், பின்னர் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம்.

ஆனால் அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களில் இந்த சிக்கல்கள் இருப்பது மிக இயல்பான ஒன்று. அண்மையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களிலும் இந்த சர்ச்சைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ப்ளூ சட்டை மாறனின் இந்த படத்தை பொருத்தவரை, மதம் சார்ந்த சமகால பிரச்சனைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமான நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு சென்சார் குழுவினர் தடை விதித்துள்ளனர்.

இத்தடை குறித்து பேசிய தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா, 'சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளதாகவும் இந்த மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், இத்தடை விரைவில் நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் திரைக்கு வரும்' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ALSO READ: மூளையில் கட்டி.. பிரபல ஹாரி பாட்டர் பட நடிகர் காலமானார்! சோகத்தில் உலக சினிமா ரசிகர்கள்.!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Blue Sattai Maran Anti Indian movie banned by Censor

People looking for online information on AndiIndian, BlueSattaiMaran, Censor will find this news story useful.