ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இந்தியன்' படத்தின் அசத்தலான அடுத்த அப்டேட்! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா விமர்சனங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் Blue சட்டை மாறன். இவரின் பாமரத்தனமான விமர்சனங்கள் சினிமா சம்பந்தபட்டவர்களை கோபமடைய வைத்தாலும், ரசிகர்களின் ஆதரவு கனிசமாக இவருக்கு உண்டு. இந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள திரைப்படம் ஆன்டி இண்டியன். இது இவருக்கு முதல் திரைப்படமாகும். ஆதம் பாவா இந்த படத்தை Moon பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.

Advertising
>
Advertising

சென்சார் போர்டால் தடைவிதிக்கப்பட்டு, பிறகு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ‘ஆடுகளம்’ நரேன்,  ‘வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தபடத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவினை ப்ளு சட்டை மாறனே தொகுத்து வழங்கியுள்ளார். இந்த விழாவில் நடிகர் ராதா ரவி, பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராதாரவி இந்த படம் வெற்றியடையும் என்றும், தற்போது சர்ச்சையான படங்களே வெற்றியடைவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த படத்தை டிசம்பரில் வெளியிடுவதாக படக்குழு முன்னர் அறிவித்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதும் இந்த படம் மத அரசியல் பற்றிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Blue sattai maaran directorial anti indian movie update

People looking for online information on Anti Indian, Blue Sattai will find this news story useful.