சிங்கப்பூரில் தடைச் செய்யப்பட்ட BLUE சட்டை மாறனின் ANTI INDIAN படம்! என்ன காரணம்? முழு விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா விமர்சனங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் Blue சட்டை மாறன்.

Advertising
>
Advertising

இவரின் பாமரத்தனமான விமர்சனங்கள் சினிமா சம்பந்தபட்டவர்களை கோபமடைய வைத்தாலும், ரசிகர்களின் ஆதரவு கனிசமாக இவருக்கு உண்டு. இந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள திரைப்படம் ஆன்டி இண்டியன். இது இவருக்கு முதல் திரைப்படமாகும். ஆதம் பாவா இந்த படத்தை Moon பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ‘ஆடுகளம்’ நரேன்,  ‘வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை டிசம்பரில் வெளியிடுவதாக படக்குழு முன்னர் அறிவித்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.  இந்த படம் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்படி இன்று இப்படம் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரில் ஆன்டி இண்டியனை திரையிட படக்குழு முடிவு செய்திருந்தனர். ஆனால் படம் பார்த்த Examine Committe மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்து விட்டது.
எனவே படக்குழுவினர் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.
நாளையோ அல்லது நாளை மறுதினமோ மறுதணிக்கை செய்யப்பட்டு இப்படம் திரைக்கு வருமென படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த படம் இந்திய சென்சார் போர்டால் தடைவிதிக்கப்பட்டு, பிறகு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய இணைப்புகள்

Blue sattai Anti Indian Movie Banned in Singapore full deets

People looking for online information on Anti Indian, Anti Indian Review, ஆன்டி இந்தியன், சிங்கப்பூர், ப்ளூ சட்டை, Banned, Blue Sattai, Maran, Singapore will find this news story useful.