பாஜக நிர்வாகி நடிகை குஷ்புவுக்கு மத்திய அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு.. முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்புவுக்கு மத்திய அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூப்பர் ஹிட் டிரெண்டிங் தமிழ் பாட்டு.. தங்கச்சியுடன் டான்ஸ் ஆடிய கிரிக்கெட்‌ பிரபலம்..!

தமிழ் சினிமாவில் 85-90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர்.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பு நடித்துள்ளார்.  பின் குணசித்திர வேடங்களில் குஷ்பு நடித்து வந்தார். அவ்வப்போது அவனி நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

Images are subject to © copyright to their respective owners.

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014-வரை திமுக கட்சியில் இருந்த குஷ்பு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, தற்போது பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆக வலம் வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு குஷ்பு தோல்வி அடைந்தார். இந்நிலையில் மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Also Read | பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி வளைகாப்பு.. கணவரான நடிகர் நவீன் குறித்து நெகிழ்ச்சி!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BJP Spokesperson Khushbu Sundar gets nominated as a member of the National Commission for Women

People looking for online information on BJP Spokesperson, Khusbboo Sundar, Khushboo will find this news story useful.