BIG BREAKING: தீபாவளிக்கு நேரடியாக மோதும் பிகில் VS கைதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இவ்விரு திரைப்படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று (அக்.17) மாலை ரிலீசாகவுள்ளது. இதனிடையே, பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.25ம் தேதியே ரிலீசாகவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் இயக்குநர் ‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜென்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த தீபாவளிக்கு சரவெடி சத்தம் இருக்கும், சிறை வாசமும் இருக்கு..!

Bigil and Kaithi will be releasing on October 25 for Diwali

People looking for online information on Atlee, Bigil, Kaithi, Karthi, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.