பிகில் பட நடிகைக்கு விரைவில் திருமணம்.. சினிமாவை போல் கல்யாணத்தை அறிவித்த காதலர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் தனது பிறந்தநாளை இன்று வியாழக்கிழமை கொண்டாடினார். 
இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவரது நெருங்கிய நண்பரான ஜோமன் ஜோசப் என்பவர் துபாயில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் அவரிடம் திருமணம் பற்றி கேட்டுள்ளார்.
சினிமாவில் வருவது போல ஜோமன் அந்த பிறந்தநாள் பார்ட்டியில் அவருக்கு புரொபோஸ் செய்ய உடனே ரெபா மோனிகா அதை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் வைரலாக வலம் வருகின்றன.

இந்த விஷயத்தை அவரது வருங்கால கணவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "லாக்டவுன் காரணத்தினால் ஆறு மாதங்களாக ரெபாவை சந்திக்க முடியவில்லை.இன்று எங்கள்  திருமணத்தைப் பற்றி முடிவெடுத்து விட்டோம்" என்று கூறி ரெபாவுடன் அழகிய புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சில வருடங்களாக அவர்கள் காதலித்து வந்ததாகவும். தற்போது தங்களது காதலை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிகில் பட நடிகைக்கு விரைவில் திருமணம்.. சினிமாவை போல் கல்யாணத்தை அறிவித்த காதலர்கள்..! வீடியோ

Bigil actress got hitched பிகில் பட நடிகைக்கு விரைவில் திருமணம்

People looking for online information on Reba Monica will find this news story useful.