பிகில் படத்தில் நடித்த பிரபல இளம் நடிகை திருமணம் செய்துள்ளார்.
Also Read | மோகன்லால் & சிரஞ்சீவி.. ரசிகர்களை கவரும் 'GOD FATHER' படத்தின் அதிரடியான டிரெய்லர்!
2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் வகைமையில் வெளியான பிகில் படத்தில் நயன்தாரா, அமிர்த அய்யர், வர்ஷா பொல்லம்மா, காயத்ரி ரெட்டி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தினை அட்லி இயக்கி இருந்தார். A. R. ரஹ்மான் இசையமைத்திருந்தார்.இந்த திரைப்படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டது.
இந்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக மாரி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி. 26 வயதாகும் இவர் தன்னுடைய 20 வயதிலேயே மிஸ் இந்தியா பட்டம் சூடியவர். பிகில் படத்தை தொடர்ந்து கவின் நடித்த லிஃப்ட் படத்திலும் தாரா எனும் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்துள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கிராபிக்ஸ் டிசைனராகவும் காயத்ரி ரெட்டி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காயத்ரி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. வெளிநாட்டில் மாப்பிள்ளை வெளிநாட்டில் கன்ஸ்டிரக்ஷன் தொழில் செய்பவர் என்றும் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆக இருப்பதாக ஏற்கனவே காயத்ரி ரெட்டி கூறியுள்ளார்.
ரசிகர்கள் & சக நடிகர்கள் பலரும் காயத்ரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | பிரிட்டனில் சுற்றுப்பயணம்..கிளாமர் லுக்கில் அசத்தும் தி கிரேட் இந்தியன் கிச்சன் பட நடிகை!