விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். இதில் முதலாவதாக தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டின் முதல் திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து, தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டுக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் காரசாரமாக சென்று கொண்டிருந்ததற்கு மிக முக்கியமான காரணமாக அபிஷேக் விளங்கினார். யூடியூப் பிரபலமான அபிஷேக் ராஜாம் ஆதரவு மற்றும் விமர்சனங்கள் என இரண்டையுமே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்கொண்டார். இருப்பினும் சுவாரசியமான விளையாட்டை விளையாடி வந்த அபிஷேக், நாடியாவைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்டார்.
அவருக்கும் முன்னதாக நாடியா சாங் வெளியேற்றப்பட்டு இருந்தார். எனினும், அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் எப்போதும் அமைதியுடனும் அழுத்தத்துடனும் இருப்பதாக குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டை தவிர்த்து, அவர்மீது பெரிதாக எந்த விதமான நெகட்டிவ் விமர்சனங்களும் இல்லை.
இவர்களைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் பயணித்த பிரபல நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு வெளியேறினார். பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகளிலும், பேச்சுகளிலும், பிரச்சினைகளிலும் சரிவிகித அளவில் பங்களிப்பை அளிக்க முடியாததாக பலரும் நாமினேஷனில் அவர் பெயரை முன்மொழிந்ததை அடுத்து அவரது எலிமினேஷன் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுருதி வெளியேற்றப்பட்டார். மாடலிங் துறையை சேர்ந்த சுருதி, வெளியேறும்போது மதுமிதாவை தன் ஃபிளாட் மேட்டாக உடன் தங்க வைத்துக்கொள்வதாகவும், பாவனியை விட்டு பிரிவதற்காக வருத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து, பாவனி, அக்ஷரா, ராஜூ, அபினய் ஆகியோரில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்கிற பேச்சுகள் இருந்து வந்தன. இவர்கள் ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்து வந்த நிலையில், கடைசியாக மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.
வெளியேற்றப்பட்ட உடன் மதுமிதா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து சக போட்டியாளர்களிடம் அழுதும், கட்டியணைத்து அனைவருக்கும் வாழ்த்து சொல்லியும், “யாரும் சண்டை போடாதீர்கள்” என்று அறிவுரை சொல்லியும் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனை சேர்ந்த தமிழரான மதுமிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், “இவ்வளவு சீக்கிரம் வெளியே செல்வீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?” என்று மதுமிதாவிடம் கமல்ஹாசன் கேட்டபோது, “நான் மிகவும் சோர்வாக இருந்தேன். இன்னும் வீட்டுக்குள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேறு என்ன செய்ய?” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “இதை நீங்கள் சோர்வாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் வயது உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இன்னும் நீண்ட நெடிய இலக்குகளை பார்க்க வேண்டும். அவற்றை நோக்கிச் செல்லவேண்டும். பயணங்களைத் தொடருங்கள். இன்னும் அதிக உயரங்களைத் தொட வேண்டும்” என்று வாழ்த்தினார்.
அத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதா வாழ்ந்த தருணங்களை தொகுத்த ஒரு குறும்படமும் போட்டுக்காட்டப்பட்டது.