“இந்த பொம்மை கால வாரி விட்ரும்!”.. சமயம் பார்த்து நிரூப் பற்றி கூறிய வருண்! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் பொம்மை டாஸ்க் நடந்து கொண்டு இருக்கிறது.

Advertising
>
Advertising

இதில் போட்டியாளர்கள் குறிப்பிட்ட போட்டியாளரின் பெயர் எழுதப்பட்ட பொம்மையை எடுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் ஓட வேண்டும். எந்த போட்டியாளர் கடைசியாக வருகிறாரோ.. அவர் கையில் இருக்கும் பொம்மையில் பெயர் எழுதப்பட்ட போட்டியாளர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இதன்மூலம் போட்டியாளர்கள் நினைத்தால் தங்களுக்கு பிடித்த ஒருவரை காப்பாற்றவும் அல்லது தங்களுக்கு வேண்டாத ஒருவரை பழி தீர்க்கவும் முடியும். அதாவது இந்த டாஸ்க் மூலம் குறிப்பிட்ட ஒரு போட்டியாளரை இந்த போட்டியில் இருந்து வெளியேற்ற முடியும்.

இந்த போட்டிகளில் ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் வரவெ செய்தன. குறிப்பாக அக்‌ஷராவை தன் பலத்தால் பிடித்து ஓரிடத்தில் நிறுத்தினா நிரூப். இதனால் அக்‌ஷராவால் நகரக்கூடிய முடியவில்லை. இதனை கண்டு அதிருப்தி அடைந்த வருண், அடுத்ததாக நிரூப்பின் பொம்மையை எடுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தார்.

காரணம் அப்போதுதான் நிரூப் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதுதான். இதனைத் தொடர்ந்து மற்றும் வருண் & நிரூப் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அதில் இருவரும் ஆவேசமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு பொம்மையை எடுத்து, அந்த பொம்மையை பற்றிய குணாதிசயத்தை விளக்க வேண்டும். அதாவது அந்த பொம்மையை சொல்வதுபோல் பொம்மையில் எழுதியிருக்கும் பெயருக்குரிய நபர் பற்றிய ஒரு மதிப்பீட்டை முன்வைக்க வேண்டும்.

அந்த வகையில் நிரூப் பொம்மையை பற்றி பேசிய வருண், “இது நேராக நின்று கொண்டிருக்கும் ஒரு நல்ல பொம்மைதான். ஆனால் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடும்” என்று அந்த பொம்மையின் காலை வாரிய படி கூறினார். இதனால் நிரூப் மற்றும் வருண் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதங்கள் எழலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிரூப் எதுவும் பேசாமல் சரி என்றபடி அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosstamil5 niroop will pull legs varun indirect critic

People looking for online information on Abhinay, BiggBossTamil5, Imman, Isaivani, Iykki, Niroop, Raju, Varun will find this news story useful.