அடிச்சு புடிச்சு ஓடிய அக்‌ஷரா & அமீர்!.. கடைசியில் பாவனி வெச்ச பரபரப்பு ட்விஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்காக வாரவாரம் அறிமுகப்படுத்தப்படும் புதிய டாஸ்குகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

biggbosstamil5 new task to elect captain akshara amir pavani
Advertising
>
Advertising

அந்த வகையில் அனைவருக்கும் ஏறக்குறைய பரிட்சயமான ஒரு டாஸ்க்தான் இசைக்கேற்ப நாற்காலிகளை சுற்றி வந்து ஒரு நாற்காலியை பிடிப்பது. இந்த டாஸ்க் தற்போது இந்த வார கேப்டனை தேர்ந்தெடுக்கும் விதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

biggbosstamil5 new task to elect captain akshara amir pavani

இதனை அடுத்து போட்டியாளர்கள் இசைக்கு ஏற்ப நாற்காலியை சுற்றிச்சுற்றி ஓடிவந்து இசை நிறுத்தப்பட்டதும், தங்களுக்கென ஒரு நாற்காலியை பிடித்துக்கொண்டனர். ஒரு நாற்காலி கூட கிடைக்காத ஒரு போட்டியாளர் ஒவ்வொரு சுற்றிலும் வெளியேற்றப்படுகிறார். ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் போது அதற்கு ஏற்ப நாற்காலியும் வெளியேற்றப்படும், இறுதியில் ஒரே நாற்காலிக்காக அக்‌ஷரா மற்றும் அமீர் இருவரும் எய்ம் செய்தனர்.

அப்படி ஓடும்போது ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு தள்ளுமுள்ளு செய்துதான் ஓடினர் என்றாலும்கூட, இறுதியில் நாற்காலி மீது அமரும் முயற்சியில் எகிறி குதிக்கும் போது அக்‌ஷரா கீழே தவறி விழ, அமீர் மட்டும் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனினும் இறுதியில் அக்‌ஷரா எழுந்து தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்பது போல் நிற்க, அமீர் அக்‌ஷராவுக்கு கை கொடுக்கிறார். எப்படியோ இந்த டாஸ்கில் அமீர் வெற்றி பெற்றுவிட்டார் என்று நினைத்தால், கடைசியில் வந்தது தான் ட்விஸ்ட்.

அமீர் பிக்பாஸ் போட்டியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக அறிமுகமானார். பிரபல விஜய் டிவியின் கோரியோகிராபரான அமீர்,  டான்ஸ் ஆடிக் கொண்டே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். அனைவரையும் டான்ஸ் ஆடவும் வைத்தார். இந்தநிலையில் அமீர் ஜெயித்த பின்பு பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாவனியிடம் இருக்கும் நாணயத்தை அவர் பயன்படுத்தி கேப்டன் ஆக விரும்புகிறாரா? என்று பிக்பாஸ் அவரிடம் கேட்க, பாவனியோ, ஆம் அந்த நாணயத்தை பயன்படுத்தி கேப்டனாக விருப்பம் என்று தெரிவித்துவிட்டார்.

இதனைத்தொடர்ந்து இந்த வார கேப்டனாக பாவனி மாறி இருக்கிறார். பாவனி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosstamil5 new task to elect captain akshara amir pavani

People looking for online information on Akshara, Akshara Reddy, Amir, Biggboss akshara, BiggBoss5, BiggBossTamil5, Trending will find this news story useful.