பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து.
இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 18 போட்டியாளர்களுள் ஒருவராக திகழ்கிறார். முன்னதாக தனக்கு ரிலேஷின்ஷிப்பின் மீது நம்பிக்கை இருந்தாலும் கூட பயம் இருப்பதாக தெரிவித்திருந்த நமீதா மாரிமுத்து, பிக்பாஸிற்கு தற்போது செல்லப்பெயர் வைத்திருக்கிறார்.
அதன்படி பிக்பாஸ்க்கு நமீதா மாரிமுத்து, கண்மணி என்று செல்லப்பெயர் வைத்துள்ளார். அதற்குக் காரணம், ஒவ்வொரு மணித்துளியும் வீட்டுக்குள் நடப்பதை பார்த்து அனைவர் கண்களுக்கும் பிக்பாஸ் காட்டுகிறார் என்பதுதான். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்க் போய்க்கொண்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை கதையாய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வகையில் தன் கதையைச் சொன்ன திருநங்கை நமீதா மாரிமுத்து, "எங்க அம்மா, ஒருத்தங்களுக்கு ஒரு குறை இருந்தா அதை ஏத்துக்கிட்டு வாழணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்னை ஏத்துக்கல.
அடி அடின்னு அடிச்சு என் உடம்பு மரத்து போச்சு. இந்த சமுதாயத்துல திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கும் பிச்சை எடுப்பதற்குமானவர்களாகவே பார்க்கின்றனர். இது எல்லாத்துக்கும் காரணம் பெத்தவங்க மட்டும்தான். வேறயாருமே இல்ல." என்று ஆதங்கத்துடன் பேசினார்.
மேலும், "நீங்க மாறுங்க மாறுங்கனு எங்கள சொல்றீங்க. ஃபர்ஸ்ட் நீங்க மாறுங்க. நாங்க எப்பவோ மாறிட்டோம்" என பேசினார். இறுதியாக "பெத்தவங்களும் பொறுப்பா இல்ல. மத்தவங்க பொறுப்போட இல்ல." என தேம்பி அழுத நமீதாவுக்கு ஹவுஸ்மேட்ஸ் கட்டி அணைத்து ஆறுதல் கூறத் தொடங்கினர்.