பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நடிகர் சரத்குமார் திடீரென ஒரு பணப்பெட்டியை அறிமுகப்படுத்தி இருந்தார்.

சரத்குமார் எண்ட்ரி
அதில் 3 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் இருக்கலாம் என கூறிய நடிகர் சரத்குமார், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு இப்போதே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என அறிவித்தார். அதே சமயம் ஒருவர்தான் வெற்றி பெற முடியும் என்றும் அறிவித்தார். ஆனால் முடிவு அவரவர்களுடையது என்றும் அவர் ஆணித்தரமாக கூறினார்.
போட்டியாளர்களின் எதிர்பார்ப்பு
இந்நிலையில் இந்த பெட்டியை பார்த்த பிரியங்கா, அதில் இருந்த ரூ.5 லட்சம் என்பதை பார்த்துவிட்டு, “எனக்கு கடைசியில் ஒரு பூஜ்ஜியமும், முன்னால் ஒரு 4-ம் சேர்ந்திருக்கலாம்.” என்று அதாவது அவர் ரூ.45 லட்சத்தை குறிப்பிட்டு பேசினார். அதன் பின்னர் பேசிய பாவனி இப்போதிருக்கும் அமௌண்ட் பற்றி இல்லை. ஒருவேளை அந்த பணத்தொகை ரூ. எனக்கு 15 லட்சமாக இருந்தால், தான் அதுபற்றி யோசிப்பதாகவும் தெரிவித்தர்.
நிரூப்பின் கணிப்பு
இதன் பிறகு பேசிய நிரூப், நான் ஒரு 7 லட்சம் ரூபாய் இருந்தால் எடுப்பது பற்றி சிந்திப்பேன் என்று கூறினார். முன்னதாக இந்த பெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த முதலே, நிரூப், தான் இதுபற்றி ஆச்சரியமாக பேசத் தொடங்கினார். குறிப்பாக, சரத்குமார் சொன்னது போல், கடைசியில் யாராவது ஒருவர் தான் வெற்றிபெறப் போகிறார்கள். அதனால் இந்த பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு செல்வது என்பது தவறு என்று சொல்ல முடியாது என்று நிரூப் கூறினார். மேலும் இப்படி 25 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும் நிரூப் கணித்தார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணமதிப்பு
நிரூப்பின் இந்த பேச்சுக்கு சிபியும் ஆமோதித்தார். அதே சமயம், முதலில் 3 லட்ச ரூபாய் என சரத்குமார் அறிவித்திருந்தார். அந்த பெட்டியிலும் அவ்வாறுதான் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த மதிப்பு அதைவிட அதிகமாகவும் இருக்கலாம், எனக்கே தெரியாது என்று சரத்குமார் பேசியிருந்தார். அவர் சொன்ன மாதிரியே அந்த பெட்டியின் பண மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதை ப்ரோமோக்களில் காணமுடிகிறது.
கோடி கோடியாக பணம் இருந்தாலும் வேண்டாம் - தாமரை
முன்னதாக நிரூப் தாமரையிடம், “உனக்கு கடன் பிரச்சினை இருக்குல்ல?? நீ ஏன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு செல்ல கூடாது?” என கேட்டிருந்தார். இதற்கு தாமரை “பயங்கரமா சம்பாதிக்கும் நம்பிக்கை வந்துடுச்சுடா.. அப்றம் என்னடா? இந்த வீட்ல வாழ்றத விட இந்த பணம் பெரிய விஷயமாடா? கோடி கணக்குல பணம் வெச்சா கூட நான் எடுக்க மாட்டேண்டா?!” என்று பதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.