ஒரே நாளில் 2 எலிமினேஷனை அறிவித்த கமல்ஹாசன்! BIGGBOSSTAMIL5 விறுவிறுப்பான 84வது நாள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 84வது நாள் எபிசோடில், எலிமினேட் ஆகும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். முன்னதாக தவிர்க்க முடியாத காரணங்களால், பிக்பாஸ் வீட்டில் இணைந்த முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார். 

இதனைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக நாடியா சாங், அபிஷேக், சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி, பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபினய் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அமீர் மற்றும் சஞ்சீவ் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்து வெளியேறப்போவது யார் என்பது குறித்த ஒரு ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இந்த ப்ரோமோவில், 84வது நாள் எலிமினேஷனில் 2 போட்டியாளர்கள் இந்த போட்டியை விட்டு வெளியேறப் போவதாக கமல் சூசகமாக அறிவித்திருந்தார். 

அதன்படி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில், 2 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதில், அக்‌ஷரா மற்றும்  அருண் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார். வருண் மற்றும் அக்‌ஷராவை பொருத்தவரை, இருவரும் ஒருவருக்கொருவர் டாஸ்குகளின்போது உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosstamil5 kamalhassan announced two elimination day 84

People looking for online information on விஜய் டிவி, Biggboss 5 tamil, Biggboss elimination, BiggBoss5, Biggboss5 elimination, Biggboss5 tamil, Biggbosss 5 eviction, BiggBossTamil5, Biggbosstamil5 elimination, Vijay television trending, Vjay tv will find this news story useful.