பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்5 அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டம் சென்றுகொண்டிருக்கிறது. முன்னதாக கதை சொல்லட்டுமா டாஸ்க் போய்க்கொண்டிருந்தது. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவரவர் கதையைக் கூறினர். இதனிடையே முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறி இருக்கிறார்.
இந்நிலையில் ஒரு லைக், ஒரு டிஸ் லைக் கொடுக்கும் ஆப்ஷனை கொடுத்து அனைவரும் காரணம் கூறி ஒருவரை லைக் செய்தோ, ஒருவரை டிஸ்லைக் செய்தோ தங்களது கருத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி பலூனை பின்னால் கட்டிக்கொண்டு கையில் கிடைக்கும் ஊசியை அடுத்து ஹவுஸ்மேட்ஸ் அடுத்தவர் பலூனை உடைக்க வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அனைவரும் அடுத்தவர் பின்னால் இருக்கும் பலூனை உடைக்கும் செயலை துரத்தி துரத்தி செய்தனர்.
இதில் வருண் தன் ஊசியால் தனது பலூனை தானே உடைத்துக்கொண்டார். பின்னர் நிரூப்பின் பலூனை, தன் பலூன் உடைந்த பின்பும் அபினய் (ஜெமினி கணேசன் - சாவித்ரி பேரன்) உடைக்க முயற்சித்தார். ஆனால் அது போட்டியே இல்லை என நிரூப்பும் இமானும் கூற அபினய் மற்றும் வருண் இருவரும் ஏற்க மறுப்பதுடன், அது ரூல்ஸ்லயே இல்லை என்று வாக்குவாதம் செய்கின்றனர். இதனிடையே அபினய் சீரியஸாக எடுத்துக்கொண்டதாக இமான் அண்ணாச்சி கூறி வந்ததை தடுத்து கோபப்பட்ட அபினய் ‘அத மட்டும் சொல்லாதீங்க.’ என்று காட்டமாக கூறிவிட்டார்.
கடைசியாக ரூல் புக்கை மீண்டும் ஐக்கி, படிக்க, “யாருடைய பலூன் உடைகிறதோ.. அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறார்கள்” என இருக்கிறது. அப்போது இதைத்தானே நாங்கள் சொன்னோம் என இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப் கூறுகிறார்.
ஒரு வழியாக நிரூப்பின் பலூனை தாமரை செல்வி உடைக்க, கடைசியாக சின்ன பொண்ணுவுக்கும் தாமரை செல்விக்குமான ஃபைனல் போட்டியில் சின்னபொண்ணுவே தன் பலூனை உடைக்க தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டின் தலைவர் ஆனார்.
இதனால் தாமரை செல்வியை இந்த வாரத்துக்கு எலிமினேஷன் பண்ண முடியாது என பிக்பாஸ் கூறிவிட்டார்.