ஏரியா பிரிச்சுட்டாங்க போலயே.. இனி என்னென்ன நடக்குமோ! யார் எந்த டீம்க்கு கேப்டன்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருவராக அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருவர் பின் ஒருவராக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு, எப்படியோ ஒருவழியாக முதல் நாளை அடுத்து இரண்டாவது நாளாக செட் ஆகி விட்டனர் அல்லது செட்டிலாகி விட்டனர் என்று சொல்லலாம்.

எனினும் ஒருவருக்கு ஒருவர்  ‘ஜெல்’ ஆவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் போதுமானது என்று கருதப்படுகிறது. இதனிடையே அனைவரும் ஒரே அரங்கில் அமர்ந்து பிக்பாஸ் சொல்வதை கேட்கத் தொடங்கினர். முதற்கட்டமாக பிக்பாஸ் அனைவரையும் வீட்டு வேலை தொடர்பான பொறுப்புகளை எடுத்துக் கொள்ளச் சொல்லி சொல்ல, அதற்கு ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்கிறார். மேலும் கேப்டனாக இருக்க விரும்புபவர்கள் தானாகவே முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.

இதில் ராஜு, நமீதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, பாவனி ரெட்டி ஆகியோர் தாமாகவே முன் வந்து நிற்கின்றனர். இப்போது ஒவ்வொருவரையும் முதலில் எந்த பிரிவை கேப்டனாக இருப்பதற்கு தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? என்று பிக்பாஸ் கேட்டதற்கு நமீதா பாத்திரம் துலக்குவதற்கும், சின்னப்பொண்ணு சமையல் பிரிவையும், பவானி ரெட்டி ஹவுஸ் கிளீனிங் பொறுப்பையும் எடுத்துக் கொள்வதாகவும், ராஜு பாத்ரூம் பிரிவுக்கு கேப்டனாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் விஜே பிரியங்கா, “இந்த வேலையை செய்கிறோம்... நண்பர்களானோம்” என்று கோஷம் இடுகிறார். அடுத்து இந்த பிரிவுகளின் கீழான அணிகளுக்கு உறுப்பினர்களாக யார் எவரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அந்தந்த பிரிவின் கேப்டன்களை பிக்பாஸ் கேட்கிறார்.

அப்போது ராஜூ தமது அணிக்கு அபிஷேக், தாமரைச்செல்வி, வருண், இமான் அண்ணாச்சி ஆகியோர் வேண்டுமென்று தேர்வு செய்கிறார். நமீதா தன்னுடைய பாத்திரம் கழுவும் பிரிவுக்கு ஸ்ருதி, மதுமிதா, நிரூப் ஆகியோரை தேர்வு செய்கிறார்.  சின்ன பொண்ணு தம்முடைய சமையல் பிரிவுக்கு பிரியங்கா, அக்ஷரா, மாஸ்டர் சிபி உள்ளிட்டோரை தேர்வு செய்கிறார். பாவனி ரெட்டி தம்முடைய ஹவுஸ் கிளீனிங் பிரிவுக்கு நாதியா, ஐக்கி பெர்ரி, இசைவாணி மற்றும் அபினவ் ஆகியோரை தேர்வு செய்கிறார்.

இப்படியாக பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் கட்டமாக ஏரியா பிரிக்கும் படலம் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. அடுத்து நடக்கவிருப்பது என்னென்ன என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: போடு வெடிய!!.. பிக்பாஸ் சீசன் 5-ல ‘இவங்களுக்கு’ Army ஆரம்பிக்க போறாங்களா? யார் இந்த அக்‌ஷரா?

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosstamil5 housemates captain for separate works vijay tv

People looking for online information on Abhinav, Akshara Reddy, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision will find this news story useful.