பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்கூல் மெமரிகளை நினைவுபடுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடந்து வருகிறது.
இதில் சிபி வார்டனாக இருக்கிறார். ராஜூ தமிழாசிரியராக இருக்கிறார். அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இணைந்த விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர், எலிமினேட் ஆகி, மீண்டும் இணைந்த அபிஷேக் ஆகியோரும் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.
மற்றவர்கள் மாணவர்களாக உள்ளனர். இதில் தற்போது மாணவர்களை சிறுவயதில் அனைவருக்கும் வார்த்தை உச்சரிப்புகள் சரியாக வரவேண்டும் என்பதற்கானக் டாஸ்க்காக நாப்பிறழ்ச்சி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மட்டும்தான்.
இதில் தமிழாசிரியர் ராஜூ, மாணவர்களுக்கு ஒவ்வொரு சொற்றொடரை கொடுப்பார். அதை ஒவ்வொரு மாணவரும் 10 முறை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும். அதன்படி இமான் அண்ணாச்சிக்கு, “பத்திரத்த பத்திரமான இடத்துல வெச்சா பத்திரம் பத்திரமா இருக்குமா?”, “லாரி நிறையா இறால்.. அதுல நாலு இறால் நாறுன இறால்”, “இது யாரு தச்ச சட்ட.. எங்க தாத்தா தச்ச சட்ட.. ” ஆகிய வாக்கியங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை ஆடிக்கொண்டே சொல்லி இமான் அண்ணாச்சி அசத்திவிட்டார்.
பிரியங்காவுக்கு, “பழுத்த கிழவி.. கொழுத்த மழையில் .. வழுக்கி விழுந்தாள்.. ” என்கிற வாக்கியம் கொடுக்கப்பட்டது. இதில் பிரியங்கா சிரமப்பட்டார். இதனைத் தொடர்ந்து அக்ஷராவுக்கு, “சேத்துக்குள்ள சின்னப்புள்ள தத்தி தத்தி சிக்கிக்கிச்சு” என்கிற வாக்கியம் கொடுக்கப்பட்டது. அவரும் தான் மனப்பாடம் பண்ணியபடி ஜாலியாக ஆடிக்கொண்டே சொல்லி அசத்தினார்.
வருணுக்கு, “கோழி கிழடு.. கோழி கொடல கிளறு” என்றும், அபினய்க்கு, “வீட்டுக்கிட்ட கூரை.. வீட்டு மேல கூரை.. கூரை மேல நாரை..” என்றும் தாமரைக்கு, “கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்டை.” என்றும் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டன.
நிரூப் சொல்லும்போது, “உள்ளுக்குள்ள பூச்சி.. பூச்சிக்கண்டா ஆச்சு..” என கூறினார். ஆனால், அது “புல்லுக்குள்ள” என ராஜூ சொல்லிக்கொடுக்க, அனைவரும் வெடித்து சிரித்துவிட்டனர். இவர்களைத் தொடர்ந்து ஐக்கி தனக்கு கொடுக்கப்பட்ட, “ரெண்டு செட்டு சோள தோசையில ஒரு செட்டு சோள தோசை சொத்த சோள தோசை..” என்கிற வாக்கியத்தை ஒரு ராப் பாடலை போல பாடினர்.