போடு!! "BIGGBOSS 5வது சீசன் ஹவுஸ்மேட்ஸ் இவங்கலாம் தானா?".. வைரல் ஆகும் யூக பட்டியல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் முதன்மையானதாக விளங்குகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கின்றன. கிட்டத்தட்ட 98 நாட்கள் முதல் 105 நாட்கள் வரை இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.

இதன் முதல் சீசனில் ஆரவ், மற்றும் 4வது சீசனில் ஆரி இதுவரை வென்றிருக்கின்றனர். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வெளியாகும் தகவவலை அறிந்த உடனேயே ரசிகர்களால் நிகழ்ச்சியைக் காண்பதற்காக காத்திருக்க முடியவில்லை.

இதனை அடுத்து, தொடர்ச்சியாக கமல்ஹாசன் நடித்து வந்த பிக்பாஸ் 5-க்கான ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. நறுக்கென்றும் நச்சென்றும் வெளியான இந்த ப்ரோமோக்கள்  பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய கான்செப்ட்டை ஒட்டியிருந்தன.

அதாவது பிக்பாஸ் வீட்டுக்குள் கிசுகிசு பேசுவது, பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே ஒரு முகம் - வெளியே ஒரு முகம் என இரட்டைவேடம் போடுவது, முதலில் கலகலப்பாக தொடங்கி பிறகு வெறுப்பு சண்டை என மாறுவது, நாம் நாமாக இயல்பாக இருப்பது உள்ளிட்ட பலவற்றை மையமாக வைத்து இந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றன.

இந்த ப்ரோமோக்களை பார்த்த பலரும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன இருக்கிறதோ.. அப்படியே இந்த ப்ரோமோவில் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், உண்மையை இப்படி புட்டு புட்டு வச்சிட்டீங்களே பாஸ் என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5வது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் முடிவாக இருக்க போகும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் ஆங்காங்கே பேசப்பட்டு வருகின்றன.

Also Read: பிக்பாஸ் கேபியுடன் ‘அப்பா’ படத்துல நடிச்ச பொண்ணா இது?.. இப்ப எப்படி இருக்காங்க பாருங்க.. செம்மயா வெளியான புது பட அப்டேட்!

மிக விரைவில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாக கூடிய நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்னும் அதிகாரபூர்வமாக போட்டியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் இந்த வீட்டில் இருக்கப்போகும் போட்டியாளர்களாக இருக்கலாம் என்கிற ஒரு யூக பட்டியல் ரசிகர்களிடையில் பரவலாக இருக்கிறது.

அந்த பட்டியலின்படி விஜே பிரியங்கா, சின்னத்தம்பி சீரியலில் நாயகியாக நடித்த பவானி ரெட்டி, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது நடித்து வரும் ராஜு ஜெயன்மோகன், நடிகர் கோபிநாத் ரவி, பப்பி திரைப்படத்தில் நடித்த வருண்,  இவர்களுடன் விஜய் டிவி மற்றும் சன் டி.வி.யின் மூலம் பிரபலமான இமான் அண்ணாச்சி, நாடோடிகள் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்த நமீதா மாரிமுத்து, ஷகிலாவின் மகள் மிலா, பாடகி சின்னப்பொண்ணு, யாஷிகா ஆனந்தின் நண்பர் நிரூப் ஆனந்த்குமார், விஜே அபிஷேக், நடிகை ப்ரியா ராமன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இருப்பவர்களை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

போடு!! "BIGGBOSS 5வது சீசன் ஹவுஸ்மேட்ஸ் இவங்கலாம் தானா?".. வைரல் ஆகும் யூக பட்டியல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BiggBossTamil5 fanmade Contestants lists trending

People looking for online information on Biggboss, BiggBoss Contestant, BiggBoss Contestants guess, BiggBoss Contestants list, BiggBossTamil5, BiggBossTamil5 Contestants, Trending, VijayTelevision will find this news story useful.