‘இமானுக்கு’ பொறாமை .. ‘இசைவாணி’ ஃபேக்.. நாமினேஷன் செய்த பிரபல போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 5-ல் பிக்பாஸ் வீட்டுக்குள் சீரியஸ் டாஸ்குகள் கொடுக்கப்பட தொடங்கப்பட்டுள்ளன. இதனால் போட்டியாளர்களிடையே உணர்வுகள் மேலெழும்ப தொடங்கிவிட்டன. முன்னதாக கதை சொல்லட்டுமா டாஸ்கில் அனைவரும் பிறரின் கதையை கேட்டு உருகினர். சிலர் அப்போதே அந்த கதைகளை ஜட்ஜ் பண்ணவும் தொடங்கிவிட்டனர்.

biggbosstamil5 eviction nominates for imman and isaivani

இதேபோல் அடுத்தடுத்த நாட்களில் டிஸ்லைக் பண்ணுவது, விமர்சனம் வைப்பது உள்ளிட்ட விஷயங்கள் போட்டியாளர்களிடையே உண்டாக தொடங்கின. இதன் அடுத்த கட்டமாக தற்போது பலூன்களை கட்டிக்கொண்டு போட்டியாளர்கள் அடுத்தவரது பலூனை உடைத்து அவர்களை போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

biggbosstamil5 eviction nominates for imman and isaivani

இதில் தாமரைச்செல்வி வெற்றி பெற்றார். பின்னர் இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மாறுவார் என்றும், ஒரு வாரத்துக்கு அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதற்கு நாமினேஷன் செய்யப்பட மாட்டார் என்றும் பிக்பாஸ் இறுதியில் கூறினார்.

கடைசியாக மோதிக்கொண்ட தாமரைச்செல்வி - சின்னப்பொண்ணு ஆகியோரிடையே தாமரைச்செல்வி வெற்றி பெற்றார். இதனிடையே இதில் சின்னப்பொண்ணு தாமரைச்செல்வி இருவருக்கும் இடையில் ஒரு சிறிய முரண் துளிர் விட்டிருக்கிறது. தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பேரை இந்த வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நாமினேட் செய்ய வேண்டும்.
அதற்கென பிக்பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு வந்து ஒவ்வொருவரும் இருவரின் பெயரைச் சொல்லி நாமினேட் செய்து, அதற்கான காரணம் மற்றும் விளக்கங்களை கூறி இருந்தனர். அந்த வகையில் பலரும் இசைவாணி மற்றும் நிரூப் இருவரின் பெயர்களை குறிப்பிட்டிருக்கின்றனர்.

குறிப்பாக மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் சிபி இசைவாணி மற்றும் அண்ணாச்சி இருவரைப் பற்றி குறிப்பிடும்பொழுது இசைவாணி போலியாக இருப்பதாகவும், அண்ணாச்சி பொறாமையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு நாமினேட் செய்திருக்கிறார்.

இதேபோல் இசைவானியோ சின்னப்பொண்ணு மற்றும் அண்ணாச்சி இருவரையும் நாமினேட் செய்திருக்கிறார். அண்ணாச்சியை பொருத்தவரை அபினவ் மற்றும் சிபி இருவரும் (பலூன் விளையாட்டை குறிப்பிட்டு) இயல்பான விதிப்படி விளையாடாமல், “அப்படி ரூல்ஸ் இருக்கா?” என்பது போல் பேசத் தொடங்கிவிட்டதை குற்றச்சாட்டாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அக்ஷரா, சின்ன பொண்ணு, வருண், மதுமிதா  ஆகியோர் இசைவாணியை வெளியேற்ற சொல்லி நாமினேட் செய்திருக்கின்றனர்.

இதேபோல் சின்ன பொண்ணு, வருண், இசைவாணி, சிபி, நாடியா ஆகியோர் அண்ணாச்சியை வெளியேற்றச் சொல்லி நாமினேட் செய்திருக்கின்றனர். அண்ணாச்சி மற்றும் பாவணி இருவரும் சிபியை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நாமினேட் செய்திருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosstamil5 eviction nominates for imman and isaivani

People looking for online information on BiggBossTamil5, ImmanAnnachi, Isaivani, Vijay Television, Vijay tv will find this news story useful.