அடடா.. BIGGBOSS அமீர் ஜெயிக்கணும்னு அவரது மொத்த குடும்பமும் செய்த காரியம்! நெகிழ்ச்சி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக உள்ளே வந்தார்.

Advertising
>
Advertising

அமீர் தனிவாழ்க்கை

ஊட்டியை பூர்விகமாகக் கொண்ட அமீர், ஒரு டான்ஸர் ஆகவேண்டும் என அவரது அம்மாவின் கனவு கொண்டிருந்தார். அமீர் தற்போது டான்ஸர் ஆகி, அவரது அம்மாவின் நிறைவேற்றிவிட்டார். சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த அமீருக்கு அவருடைய அம்மா கொலை செய்யப்பட்டு இறந்து போன சம்பவம் தீரா மற்றும் நீங்கா சோகத்தையும் வலியையும் தந்ததாக, பிக்பாஸ் வீட்டுக்குள் தன் கதையை சொல்லும்போது அமீர் கூறி இருந்தார்.

அமீரின் மாணவி

அதன் பின்னர் அமீர் ஊட்டியில் டான்ஸ் கிளாஸ் தொடங்கியது, அப்போது அவரிடம் டான்ஸ் கற்க வந்த அலைனாவின் மூலமாக அவரது குடும்பத்துடனான அறிமுகம், பின்னர் அலைனாவுடன் விஜய் டிவி வந்து டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றது என அனைத்தையும் பகிர்ந்த அமீர், அலைனாவின் குடும்பம் தன்னை அந்த குடும்பத்தில் ஒருவராக பார்த்துக்கொள்வது பற்றி பிக்பாஸ் வீட்டுக்குள் குறிப்பிட்டு பேசி நெகிழந்தார்.

பிக்பாஸ் வீட்டில் அமீர் குடும்பம்

இதனைத் தொடர்ந்து அமீரை சந்திக்க பிக்பாஸ் வீட்டுக்குள் அமீரின் குடும்பமாக அமீரின் மாணவியும் அவரது குடும்பமும் வந்திருந்தனர். அப்போது அமீர் கேமில் ஃபோகஸ் பண்ண வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று கூறியிருந்ததோடு, அமீருடன் இருப்பவர்களுக்கு ஆடச் சொல்லித்தரணுமா? என்ன? என்பது போல் வெறித்தனமாக ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு செம மாஸ் காட்டிவிட்டு சென்றனர்.

ஃபினாலே டிக்கெட் பெற்ற அமீர்

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களே தங்கள் நிறைகுறைகளை சொல்லி பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரிக்கச் சொல்லி இந்த வாரம் பிக்பாஸே டாஸ்க் கொடுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் ஃபினாலே போட்டி வருவதுதான். ஆம், இறுதி நாள் நெருங்கி வருவதால் இனி போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் ஒவ்வொன்றுமே, அவர்கள் அடுத்து விளையாடும் டாஸ்குகள் அனைத்துமே, போட்டியாளர் அந்த வீட்டில் இருப்ப்தை தீர்மானிக்கும் டாஸ்க்காக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

எனினும் அமீர், முன்னதாக டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் வென்றதை அடுத்து, இறுதி வாரத்துக்கு நாமினெஷன் இன்றியே செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.   இந்நிலையில்தான் அமீர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமீர் குடும்பம் வேண்டுகோள் - நெகிழ்ச்சி வீடியோ 

இது தொடர்பாக அவர்கள் பேசியுள்ள அந்த வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம், இப்போது பிக்பாஸில் டாப் 5-ல் இருக்கும் அமீருக்கு உங்கள் சப்போர்ட் தேவைப்படுகிறது, அவரை நீங்கள் ஓட்டு போட்டு டாப் 3-க்கு கொண்டு வர வேண்டும் என நம்பிக் கேட்டுக்கொள்கிறோம். அவர் டாப் 5-ல் வந்ததே எங்களுக்கு மிகவும் சந்தோஷம், அவரை டாப் 3-க்குள் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம். கடின உழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளார். அந்த கடின உழைப்புக்கு பலன் கிடைக்க வேண்டும். அனைவரும் எங்கள் மாஸ்டருக்கு ஓட்டு போடுங்கள், நன்றி” என பேசியுள்ளனர்.

Also Read: ஆஹா.. இது அதுல்ல.. சுந்தரிக்கும்.. பாரதி கண்ணம்மாவுக்கும் இப்படி ஒரு கனெக்ட் இருக்கா?

அடடா.. BIGGBOSS அமீர் ஜெயிக்கணும்னு அவரது மொத்த குடும்பமும் செய்த காரியம்! நெகிழ்ச்சி வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosstamil5 amir family to fans emotional video அமீர்

People looking for online information on Amir family, Amir pavani, Biggboss amir dance, Biggboss amir dance video, Biggboss amir family, Choreographer amir, Vijay tv will find this news story useful.