பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் விதமாக உருவபொம்மையை உடைக்கும் டாஸ்க் வைக்கப்பட்டது.
அதன்படி பிக்பாஸ் போட்டியாளர்கள், தலைவராக வேண்டாம் என்று தாங்கள் கருதும் ஒருவரின் உருவபொம்மை மீதிருக்கும் பானையை உடைக்கலாம்.
அப்படி ஒவ்வொரு போட்டியாளரும் உடைக்கும்போது, மற்ற போட்டியாளர்கள் அருகில் நின்றுகொண்டு, உடைக்கும் நபரிடம், தாங்கள் கேப்டனாவதற்கான நியாயமான காரணத்தை சொல்லி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அத்துடன் கேபடன் ஆகும் நபர் அந்த வார நாமினேஷனில் வரமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் பானையை உடைக்க போன சிபியிடம் பேசிய அக்ஷரா, “பிரியங்கா பேசியே எல்லாத்தையும் பண்ணிடுவாங்க.. அவங்க கேப்டனா தான் ஆகணும்னு அவசியம் இல்ல. என்னிடம் காயினும் இல்லை. இதுவரைக்கும் நான் கேப்டனானதும் இல்லை. எனக்கு வாய்ப்பு கொடு.. என்னுடைய உருவபொம்மையை உடைத்துவிட வேண்டாம்!” என கேட்டார்.
ஆனாலும் சிபி அக்ஷரா கேப்டனாக இருக்க வேண்டாம் என்றபடியாக, அக்ஷராவின் உருவபொம்மையை உடைத்துவிட்டார். அதன் பின்னர் தனியே சென்று வருணிடம் ஃபீல் பண்ணி பேசிய அக்ஷரா “அவன் பாலை சேகரித்திருக்கலாம், ஆனால் என்னிடம் இருந்து பிடுங்கியதற்காக தான் பிரச்சனை வந்தது. ஆனாலும் பிறகு எதற்காக அதை பேசி சரி செய்தேன். அப்படி இருந்தும் என்ன இவ்வளவு ஈகோ? இப்படி மனசுல எல்லாத்தையும் வெச்சிகிட்டு இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்?” என கேட்டதுடன் அழத் தொடங்கினார்.
அதை அங்கு வந்த சிபி கேட்டுவிட்டார். பின்னர் சிபி ராஜூவிடம் பேசும்போது, “மில்க் டாஸ்கின் முடிவில் எனக்கும் அக்ஷராவுக்கும் நடந்த பேச்சுவார்த்தையின்போது, நான் ஸ்ட்ராங்கான டீம்ல இருக்கணும். நான் இறங்கி போக மாட்டேன். நான் வீக் டீமுடன் இருக்க மாட்டேன் என்று பேசியது சரியாக படவில்லை. அதற்காகத்தான் அவளது பொம்மையை உடைத்தேன்!” என குறிப்பிட்டிருந்தார்.
இதே காரணத்தை குறிப்பிட்டுதான் சிபியும், இசைவாணியும் அக்ஷராவை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கான இந்த வார லிஸ்டில் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.