தெறிக்க விடு.. செதற விடு.. BIGGBOSS ULTIMATE GRAND LAUNCH.. எதுல? என்னைக்கு? எத்தன மணிக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ்.

Advertising
>
Advertising

BiggBoss Tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. இந்த ஐந்து சீசன்களையும் இதுவரை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமலஹாசன். இறுதியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் ஐந்தில் விஜே பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்து ரன்னர் ஆனார்.

சீசன் 5-ல் ராஜூ வெற்றி

குறிப்பாக மக்களின் இதயத்தை வென்று முதலிடத்தை பிடித்து ராஜூ வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ராஜூவுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் காசோலை அந்த அரங்கத்திலேயே பரிசாக வழங்கப்பட்டது.

கிராண்ட் ஃபினாலேவில் அறிவிப்பு..

இந்த கிராண்ட் ஃபினாலேவில் நடிகர் கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பின வெளியிட்டிருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த அந்த அரங்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, கமல்ஹாசன் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி குறித்த அறிவிப்பினை வழங்கினார்.


Bigg Boss OTT

ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சி மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பதுடன் அது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியானது டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் மக்கள் பார்க்கும் விதமாக ஒளிபரப்பாக இருக்கிறது என்று அந்த அறிவிப்பில் கமல்ஹாசன் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்..

இதனிடையே தற்போது தொடங்கியிருக்கும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக, பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கேற்று விளையாடிய கவிஞரும் பாடலாசிரியருமான சினேகன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.  இதேபோல் அதே பிக் பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக இருந்த ஜூலி, இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் இரண்டாம் போட்டியாளராக பங்கேற்க உள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

Bigg Boss Ultimate

இந்த நிலையில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி  தளத்தில் 24 நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாக கூடிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது எப்போது தொடங்க இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

எதுல? என்னைக்கு? எத்தன மணிக்கு?

அதன்படி, வரும் ஜனவரி 29-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கிராண்டாக தொடங்ப்படவிருக்கிறது. அது மட்டுமின்றி இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சியானது விஜய் டிவியிலும் அதே நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சௌகார் ஜானகி உட்பட தமிழக கலை, இலக்கிய பிரபலங்களுக்கு இந்திய பத்ம விருதுகள்! முழு விபரம்.

தொடர்புடைய இணைப்புகள்

BiggBossOTT Tamil BiggBoss Ultimate grand launch official

People looking for online information on BiggBoss Ultimate, BiggBoss Ultimate grand launch, BiggBossOTT grand launch, BiggBossOTT Tamil grand launch, DisneyHotstar, DisneyHotstar Tamil, DisneyPlusHotstarTamil, Kamal Haasan, Vijay Television will find this news story useful.