BIGGBOSSOTT: தோத்துப்போன வெறுப்போட.. திரும்ப வரேன் நெருப்போட.. தெறிக்கவிடும் 1ST ஹவுஸ்மேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBoss Ultimate: விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த பிக்பாஸ் போட்டியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBossOTT Tamil BiggBoss Ultimate first contestant
Advertising
>
Advertising

பிக்பாஸ் 5வது சீசன்

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை கடந்துள்ளது. இறுதியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் ஐந்தில் விஜே பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்து ரன்னர் அப்-ஆனார். ராஜூ பாய் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ராஜூ முதலிடத்தை பிடித்து வெற்றியாளர் ஆகி 50 லட்சம் ரூபாயை பெற்று ட்ரோஃபியை தட்டிச் சென்றார்.

BiggBossOTT Tamil BiggBoss Ultimate first contestant

Bigg Boss OTT

இப்படி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தற்போது பிரபலமான ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஓடக்கூடிய பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியாக புதிய வடிவில் ஒளிபரப்பாக இருக்கிறது.  அதுவும் தமிழுக்கு என்றே பிரத்தியேகமாக வந்துள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டது.

முன்னதாக இதற்கான லோகோவை, நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஃபினாலேவில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அறிமுகப்படுத்தி, இந்நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தார்.

BiggBossOTT ப்ரோமோ 

இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் 5வது சீசன் வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு போட்டியிடவிருப்பதாக முன்னதாக கூறப்பட்டு வந்தது. அதன்படி அடுத்து வந்த ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன், “முந்தைய சீசன் போட்டியாளர்கள் புது வியூகத்துடன் மீண்டும் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறார்கள். தொலைச்சதை தொலைச்ச இடத்துல தான் தேடி முடியும். தோத்த இடத்துலதானே ஜெயிக்க முடியும்?” என்று கூறியிருந்தார்.

BiggBossOTT முதல் போட்டியாளர்

இந்நிலையில் ஓடிடியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் பங்கேற்பதாக ப்ரோமோவுடன் கூடிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கவிஞர் சினேகன், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர். அப்போட்டியில் ஆரவ் முதலிடத்தை பிடிக்க, சினேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்து ரன்னர் அப்-ஆனார்.

அதன்பிறகு அவர் சில திரைப்படங்களில் நடித்தும் பாடல்கள் எழுதியும் வந்தார். சமீபத்தில் கவிஞர் சினேகன், நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை நடிகர் கமலஹாசன் முன் நின்று நடத்தி வைத்தார். அதன் பிறகு இந்த தம்பதியர் இன்னும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் பிக்பாஸ் ஓடிடியில் களமிறங்கும் சினேகன், “தோத்துப்போன வெறுப்போட.. திரும்ப வரேன் நெருப்போட.” என்று தொடங்கும் புதிய கவிதை ஒன்றையும் வாசிக்கிறார். இந்த ப்ரோமோவை டிஸ்னி+ஹாட்ஸ்டார் தமிழ் வெளியிட்டுள்ளது.

Also Read: "யாரையும் hurt பண்ண இல்ல".. குக் வித் கோமாளி சர்ச்சை.. உடைக்கும் வெங்கடேஷ் பாத்!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBossOTT Tamil BiggBoss Ultimate first contestant

People looking for online information on BiggBossOTT, BiggBossUltimate, DisneyPlusHotstar, Snehan, Snekhan, YaaruAnthaHousemate will find this news story useful.