BIGGBOSS6 TAMIL: "எது பூன வாலா?".. GP முத்துவை படபடக்க வைத்த போட்டியாளர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாசில் GP முத்துவிடம் சக போட்டியாளர்கள் பல்வேறு கறி குறித்து வேடிக்கையாக கேட்க, அவர் அதனை கேட்டு படபடத்துப்போகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Bigg Boss 6 Tamil : ரசிகர்களின் favorite show-ஆன பிக்பாஸ்.. இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா.!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஜாலியாக வலம்வரும் GP முத்து, தன்னுடைய வெள்ளேந்தியான குணத்தால் சக போட்டியாளர்களிடம் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். முன்னதாக வீட்டுக்குள் உள்ள கேமராவில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். இந்நிலையில், வீட்டினுள் அசீம், கதிரவன் மற்றும் GP முத்து ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பாம்புக்கறி சாப்பிட்டதில்லையா? என அசீம் விளையாட்டாய் கேட்க, அதிர்ச்சியடைகிறார் GP முத்து. தொடர்ந்து கதிரவன், பூனை வால் பற்றி பேசிய உடனேயே GP முத்து தனக்கே உரித்தான உச்சரிப்பில் "எது பூன வாலா?" என அதிர்ச்சியுடன் கேட்கிறார்.

இதனிடையே எலி குடல் பற்றி போட்டியாளர்கள் பேச துவங்கியதும், தான் மட்டன், சிக்கன், பீஃப் ஆகியவை மட்டுமே சாப்பிட்டிருப்பதாக முத்து சொல்கிறார். தொடர்ந்து போட்டியாளர்களிடம் கொசு முட்டை யாராவது சாப்பிட்ருக்கீங்களா? என வேடிக்கையாக கேட்கிறார் GP முத்து.

Also Read | Biggboss 6 Tamil : "நீ பாத்தியா?" மாறி மாறி கை ஓங்கிய ஆயிஷா, தனலட்சுமி.. கடைசி'ல ஜனனி கொடுத்த Thug Life!!..

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss6 Tamil GP Muthu was shocked after hearing the dishes

People looking for online information on Bigg Boss Tamil, BiggBoss6 Tamil, GP MUTHU, Vijay tv will find this news story useful.