ஆத்தி.. இது LISTலயே இல்லயே! பாவனியவே நாமினேட் செஞ்சுட்டாரே அமீர்! அவரே சொன்ன பரபரப்பு காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் யாரும் எதிர்பராதபடி பாவனியை, கோரியோகிராஃபரும் வைல்டு கார்டு போட்டியாளருமான அமீர், எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertising
>
Advertising

BiggBossTamil5:-

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும், சக போட்டியாளர்களை நாமினேட் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவருமே 2 பேரை நாமினேட் செய்து அதற்கு தாங்கள் கருதிய காரணங்களியும் விளக்கமாகவே முன்வைத்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் கிராண்ட் ஃபினாலே தொடங்கிவிட்டதால், இந்த நாமினேஷன், போட்டியாளர்கள் மத்தியில் சற்றே தீவிரமாக இருந்தது.

சோனமுத்தா போச்சா?

ஆனால்  எனினும் இறுதியில் பிக்பாஸ் எழுதி வைத்த ஒரு வாசகத்தை பிரித்து, ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் படித்துக் காட்டும் பொறுப்பை ராஜூவிடம் ஒப்படைக்க, ராஜூவோ அதை பிரித்து படித்துக் காட்டினார். அப்போதுதான் அனைவரையுமே பிக்பாஸ் நாமினேட் செய்வதாக அதில் எழுதப்பட்டிருந்தது. இதை கேட்டு போட்டியாளர்களே சிரித்துவிட்டனர்.

இவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களின் மீதான விமர்சனத்தை முன்வைத்து, நாமினேட் செய்தனர். ஆனால் கடைசியில் சோனமுத்தா போச்சா? என்பது போல், மொத்தமாக எல்லாரையும் தானே நாமினேட் செய்வதாக பிக்பாஸ் முன்கூட்டியே எழுதி வைத்திருக்கிறார்.

எவிக்‌ஷனுக்கான நாமினேஷன்!

இதில்தான், முன்னதாக பாவனி நிரூப்பையும் தாமரையையும் நாமினேட் செய்தார். இதேபோல் அமீர் சஞ்சீவை, நாமினேட் செய்துவிட்டு, “அவர் ஃபினாலேவுக்கு போகக் கூடாது என்பதே இதற்கான காரணம்!” என்று சொல்லி நாமினேட் செய்தார். அதன் பின்னர் பாவனியை நாமினேட் செய்த அமீர், அதற்கும் ஒரு காரணத்தை கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் அமீர் - பாவனி 

முன்னதாக பாவனியிடம் அமீர் தம் அன்பை பறிமாரிக் கொண்டிருந்தார். அதற்கு முதலிலேயே நோ சொல்லிவிட்ட பாவனி, அதே சமயம், கடுமையாக அதை சொல்லாமல் இருந்தார். இதனிடையே ஒரு விளையாட்டான ஷூட்டிங்கிற்காக பாவனியிடம் அமீர் ப்ரொபோஸ் செய்ய, அமீர் பேசுவதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டதாக பாவனி கூற, அதை அமீர் மறுத்தார்.

அதன் பின்னர் அமீரின் மனம் கோணும்படியாக நடந்தகொண்டிருந்தால் தான் மன்னிப்பு கோருவதாக பாவனி தெரிவித்தார். அத்துடன் பாவனியின் வீட்டார் வந்து பாவனிக்கு பண்ணிய அட்வைஸூம், அமீர் பாவனிக்கு கொடுத்த முத்தமும் கடந்த வாரங்களில் காரசார டாப்பிக்காக இருந்துவந்தது.

பாவனியை முதல்லயே தெரிஞ்சுக்கிட்டு வந்தேனா?

இந்நிலையில் தான் பாவனியை அமீர் நாமினேட் செய்தார். அதற்கு விளக்கம் சொன்ன அமீர், “நான் பாவனியை நாமினேட் செய்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. நான் பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனிக்காக தான் வந்தேன் என சிலர் கூறிவந்ததாக அறிகிறேன். அதுவும் பாவனி பற்றி எல்லாவற்றையும் முதலிலியே தெரிந்து வைத்துக்கொண்டு நான் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததாகவும் கூறி வருவதாக அறிந்தேன்.

ஆனால் உண்மையில் இந்த பிக்பாஸ் கதவு திறக்கப்பட்டு நான் உள்ளே நுழையும்வரை நான் இங்கு வருவேன் என்பதெ எனக்குத் தெரியாது” என்று பேசினார்.

என் ஃபோகஸ் மிஸ் ஆகிவிடும்னு பேசுறாங்க!

மேலும் பேசிய அமீர், “எனவே, இதை நான் சரிசெய்ய வேண்டும் என்றும், இதனால் என் ஃபோகஸ் மிஸ் ஆகிவிடும் என்று பேசப்படுகிறது. ஆனால், உண்மையில் என் நோக்கம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருப்பதும். இங்கு ஜெயிப்பதும்தான். அதுவே எனக்கு முதன்மையானது” என்று பேசினார். இதை கேட்ட பாவனி புன்னகைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.

Also Read: ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட தாமரை & பிரியங்கா!! BiggBoss வீட்டுக்குள் பரபரப்பு சம்பவம்!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss5 tamil amir nominates pavani for eviction vijay tv

People looking for online information on Amir kissed pavani, Amir nominates pavani, Amir pavani love, Amir pavani nomination, BiggBoss5, Biggboss5 eviction, Biggboss5 tamil, Pavani amir kiss, Pavani amir love, Vijay tv will find this news story useful.