“பிக்பாஸ் VOICE ராஜினாமா பண்ணிட்டு கும்பகோணத்துக்கு போய்ட்டார்!”.. வெச்சுசெய்யும் பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாக பிரியங்கா பிக்பாஸை நேரடியாக வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை காணமுடிகிறது எனலாம்.

ஆம், இந்த அராத்து பொண்ணு பிரியங்காவை யாருக்குத்தான் பிடிக்காது.  முன்னதாக ‘பிக்பாஸ் பார்க்காதீங்க நோ’ என்று சொல்லி விளையாட்டாக தோழிகளுடன் சேர்ந்து அழுவது போல் பேசி சேட்டை செய்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் கேமராவை நோக்கி பேசத் தொடங்கிய பிரியங்கா, “ஒரே ஒரு சட்டி கொடுத்தால் அதை வைத்து எப்படி இத்தனை பேருக்கும் சமைத்து வைத்து உணவு உண்பது?” என்று பிரியங்கா கேட்க, சுற்றி இருந்த ஹவுஸ்மேட்ஸ் சிலர் பிரியங்காவை ஜாடைமாடையாக எச்சரிக்கின்றனர்.

உடனே கொஞ்சம் உஷாரான பிரியங்கா, “பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? அவர் கண்ண வச்சு என்ன பண்ணிடுவாரு? அவர் அதுக்குள்ள இருக்கிற வரைக்கும் தானே நாம பேசுவோம். அவர் இங்க வந்துடுவாரா?” என்று ஏக வசனம் பேசுகிறார்.

இருந்தாலும் பிக்பாஸ் மீது உள்ளூர ஒரு பயம் இருக்கிறது என்பது அவர் பேச்சிலேயே கண்ணாடி மாதிரி தெரிகிறது என்றாலும், இன்னொரு சம்பவத்தையும் முன்னதாக பிரியங்கா அரங்கேற்றி இருந்தார். ஆம், ராஜூ, சின்ன பொண்ணுவுக்கு டிஸ்லைக் செய்து விட்டு, பின்னர் சின்ன பொண்ணுவிடம் சென்று அக்கா அக்கா என பேசிக் கொண்டிருந்தார்.

இதை தூரத்தில் இருந்து பார்த்து, “அக்காவை ஃப்ரண்டு பிடிக்கிறான் பாரு!” என்று கிண்டல் அடித்துக் கொண்டிருந்த பிரியங்காவின் பெயரை சொல்லி திடீரென பிக்பாஸ் அழைக்க, கொஞ்சம் ஜெர்க் கொடுத்த பிரியங்கா, பிக்பாஸ் என்ன சொல்கிறார் என கேட்டபோது, அவரோ “மைக்கை சரியாக மாட்டுங்கள்!” என்று சொன்னதும், அனைவரும் சிரிக்க, “சரி.. சரி பெருசு” என்று பிக்பாஸை  போகிற போக்கில் கலாய்க்கிறார். ஆனால் பிக் என்றால் பெருசு என்றுதானே அர்த்தம் என்று சமாளிஃபிகேஷனும் செய்கிறார் நம்ம பிரியங்கா.

இதெல்லாம் கூட பரவாயில்லை. தற்போது இன்னும் ஒரு படி மேலே போய்,  “பிக்பாஸ் 5வது சீசன் தவிர்த்திருக்க வேண்டிய சீசன். தெரியாமல் ரவுடிகளை எடுத்துவிட்டீர்கள். பிக்பாஸ் VOICE ராஜினாமா பண்ணிவிட்டு கும்பகோணத்துக்கு போய்ட்டார்!” என்றெல்லாம் ஏகத்துக்கும் பிரியங்கா கலாய்த்துள்ளார்.

Also Read: “பிக்பாஸ்-ல கோவப்படுறவங்கள பாக்கும்போது கொஞ்சம் OVER-ஆ தெரியுது!” - அதிரவைத்த ராஜூ .. Viral Throwback Video!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss voice resign priyanka viral talks biggbosstamil5

People looking for online information on Abhinav, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.