‘நாமினேஷனே இல்லனு பொலம்பாதீங்க!’.. ‘இப்பவும் FRANK-ஆ பேசுனதுக்கு தேங்க்ஸ் BIGGBOSS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 92 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

BiggBoss Viral Comment during open nomination task announcement
Advertising
>
Advertising

BiggBossTamil5: இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் அவ்வப்போது பேசக்கூடிய பல விஷயங்கள் வைரல் ஆகி வருகின்றன. அன்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் அனைவரின் நெருங்கிய உறவினர்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களைக் கண்டு சென்றனர். அப்படி பாவனியின் உறவினர்கள் வரும்போது அவரது சகோதரியுடன் வந்த அந்த சுட்டிக் குழந்தையுடன் பிக்பாஸ் பேசினார். இந்த பேச்சு மிகவும் வைரலானது. பிக்பாஸை அந்த சுட்டி பாப்பா நலம் விசாரிக்க, பிக்பாஸ் பதிலுக்கு அந்த குழந்தையை நலம் விசாரித்தார்.

‘கல்லுக்குள் ஈரம்’

‘கல்லுக்குள் ஈரம்’ என்பதுபோல் பிக்பாஸ் இப்படியெல்லாம் பேசுவாரா? என்று ரசிகர்கள் கிட்டத்தட்ட ஆச்சரியமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கப்பட்டது. முன்னதாக பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் நாமினேட் செய்வதாக அறிவித்து அனைவருக்கும் கிராண்ட் ஃபினாலே என்று ஒன்று இருப்பதை நினைவூட்டினார். இதனை தொடர்ந்து அனைவரையும் ஒவ்வொரு போட்டியாளரை நாமினேட் செய்யச் சொல்லி அறிவுறுத்தினார்.

நம்பி நாமினேட் செஞ்சோமே பிக்பாஸ்!

ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு போட்டியாளராக வந்து சக போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். அதன் பிறகு ராஜூவை அழைத்த பிக்பாஸ், ஏற்கனவே எழுதப்பட்டு அங்கு வைத்திருந்த ஒரு பிரசுரத்தை எடுத்து படிக்கச் சொன்னார். அதை பிரித்து பார்த்தபோது மீண்டும் பிக்பாஸ் அனைவரையும், தான் நாமினேட் செய்வதாக எழுதியிருந்தார். அதன் பிறகு அனைவரும் வெடித்துச் சிரித்து விட்டனர். பொதுவாகவே பிரியங்கா, பிக்பாஸை பெருசு என்று அழைக்கும் போக்கை தொடங்கிவைத்தார்.

அதன்படி, ‘யோவ் பெருசு.. உன்னை நம்பி இப்படி நாமினேட் செய்தால் கடைசியில் அனைவரையும் நாமினேட் செய்வதாக ஏற்கனவே எழுதி வைத்துவிட்டு இப்படி எங்களை வைத்து காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறீரே?’ என்பதே பிக்பாஸ் போட்டியாளர்களின் ஃபீலிங்காக இருந்திருக்கக்கூடும் என்று ரசிகர்கள் பேசி வந்தனர். அதற்குப் பிறகும் பிக்பாஸ் விடவில்லையே. குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் மீது விமர்சனங்களை முன்வைத்து அவர்களின் உருவம் மீது கலர் முட்டையை வீசி அடிக்கும் டாஸ்க் வந்தது.

ராஜூ.. நீங்கள் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை..

இதில் பிக்பாஸ் ஒவ்வொரு கேள்வியாக கேட்க, அந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேட் செய்து அவர்களின் உருவப்படத்திற்கு கலர் முட்டை அடிக்க வேண்டும். அப்படி பிக்பாஸ் சொன்ன ஒரு கேள்வி புரியாமல் போக,  ஆனாலும் ராஜூ கலர் முட்டையை வீசி அடித்து விட்டார். அதன் பிறகுதான் அந்த மனிதருக்கு தோன்றியது, கேள்வியை, தான் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது. அதன் பிறகு தொடர்ச்சியாக, ‘பிக்பாஸ் எனக்கு கேள்வி புரியவில்லை.. நான் இன்னொரு முறை இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளட்டுமா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

கொஞ்ச நேரம் ராஜூவை தவிக்க விட்டு வேடிக்கை பார்த்த பிக்பாஸ், கடைசியாக ராஜூவுக்கு பதிலளிக்கவும் மனமிறங்கினார். ஆனால் அந்த பதில் மூலம் பிக்பாஸ் ராஜூவை கலாய்த்து விட்டார் என்பதுதான் உண்மை. ஆம், “ராஜூ.. நீங்கள் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை.. சொல்வது அத்தனையும் தமிழில் தான் சொல்கிறோம்.. ஒருவாட்டி நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்கள் பேச்சை நீங்களே கேட்க மாட்டீர்கள்!” என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி பறக்கவிட்டார் பிக்பாஸ்.

Open நாமினேஷன்

இந்த நிலையில் இப்போது இன்னும் சுமார் ஓரிரு வாரங்களே பிக்பாஸ் முடிவதற்கு இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் நேரடி நாமினேஷன் என்று சொல்லக்கூடிய Open நாமினேஷன்க்கு பிக்பாஸ் பணித்தார்.
அப்போது பேசிய பிக்பாஸ், “நாமினேஷன் பண்ணுவதற்கு யாரும் இல்லையே என்று புலம்ப வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” என்று அதிரடியாக கூறினார்.

மேலும் பேசியவர், “நீங்கள் நாமினேஷன் செய்வதுதான் இந்த வாரம் உங்களுடைய இறுதிப்போட்டி வரை செல்வதற்கான வாய்ப்பாக அமையும். உங்களுடைய வெற்றியை தீர்மானிக்கும்!” என்று நேரடியாகவே சொல்லிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள், ‘இப்பவும் ஃபிராங்கா பேசியதற்கு ரொம்ப தேங்க்ஸ் பிக்பாஸ்!’ என்பது போல் கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Viral Comment during open nomination task announcement

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5 will find this news story useful.