ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | அமீர் - பாவனி சந்தித்து இதோட ஒரு வருஷம் .. பார்ட்டிக்கு பின் இருவரும் உருக்கமான பதிவு.!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, பிக்பாஸ் வீட்டினுள் அரண்மனை டாஸ்க் நடைபெற்றது. அப்போது, அசீம் - ADK இடையே வாக்குவாதம் நடந்தது. இதுகுறித்து கமல் ஹாசனும் ன் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து அசீம் மீது வழக்கு போடுவதாக ADK கேமரா முன்னர் சொல்லியிருக்கிறார். அரண்மனை டாஸ்க்கில் நடைபெற்ற சாவி திருட்டு சம்பவம் தொடர்பாக அசீம் மீது தான் வழக்கு போடுவதாக ADK குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தன்மீது போடப்பட்டுள்ள வழக்கை தான் ஏற்பதாகவும், இதுகுறித்த கோர்ட் விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும் அசீம் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், அசீமை விக்ரமன் விசாரிக்கிறார். ராம் இந்த வழக்கில் நீதிபதியாக செயல்படுகிறார். அசீம் தனது வழக்கறிஞராக ஷிவின் செயல்படுவார் என கேமரா முன்னலையில் தெரிவிக்கிறார். தொடர்ந்து, நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. அப்போது, "சீக்ரட் ஸ்ட்ராட்டஜி-காக மட்டுமே சாவியை எடுத்து வைத்ததாகவும் ADK மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல" எனவும் அசீம் சார்பில் ஷிவின் சொல்கிறார்.
ADK -விற்காக வாதாடும் விக்ரமன் அசீமை விசாரணை செய்கிறார். மேலும்," சாவியை எடுத்து வைத்தற்கான காரணம் என்ன?. ஒரு மனுஷன் காலில் கட்டப்பட்டு இருக்கார். மனிதாபிமானத்தோட நாம நடந்துக்கணும். யாராவது சாவியை வச்சிருந்தா கொடுத்திடுங்கன்னு அவர் கேட்டாரா? இல்லையா?" என அசீமிடம் கேட்கிறார் விக்ரமன். அப்போது, "நிச்சயமாக அவர் கேட்டார்" என்கிறார் அசீம்.
மேலும் கேள்வியை தொடர்ந்த விக்ரமன்,"அப்படி கேட்கக்கூடிய ஒருத்தர் சாவியை தூக்கி பாக்கெட்ல வைத்துக்கொள்வாரா?" என்கிறார். இதனை பரபரப்புடன் சக போட்டியாளர்கள் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றனர்.
Also Read | தலைப்பாகை அணியாமல் வைகுண்டர் பதிக்கு சென்ற உதயநிதி?.. பாலஜனாதிபதி கொடுத்த விளக்கம்