BBULTIMATE-ல் WILD CARD என்ட்ரி கொடுக்கும் முந்தைய சீசன் BIGGBOSS நடிகை? பரபரப்பு தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை ஒருவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைய உள்ளார். 

Advertising
>
Advertising

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில்  24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதால் சிம்பு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வெளியேற்றப்பட்ட செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், விஜய் டிவி காமெடியன் சதீஷும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு நடிகை லாஸ்லியா வைல்டு கார்டு என்ட்ரி மூலம் வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

இவர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து இருந்தார்.இந்த படம் ரசிகர்கள் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் தர்ஷன், கே.எஸ். ரவிக்குமார் நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில்ல் அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து சுகர் பேபி என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு இந்த பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

 

BBULTIMATE-ல் WILD CARD என்ட்ரி கொடுக்கும் முந்தைய சீசன் BIGGBOSS நடிகை? பரபரப்பு தகவல்கள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Ultimate wildcard entry losliya mariyanesan

People looking for online information on பிக்பாஸ், Biggboss, BiggBoss Ultimate, Losliya Mariyanesan, Oviya, Wildcard will find this news story useful.