பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதால் சிம்பு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வெளியேற்றப்பட்ட செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், விஜய் டிவி காமெடியன் சதீஷும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அனிதா மீதான பார்வை
இந்நிலையில் பிராது டாஸ்கில் ஜூலியிடம் பாலாஜி முருகதாஸ் பற்றி அனிதா கேட்க அதற்கு ஜூலி, பாலா மாற்றி மாற்றிப் பேசுவதை சில வேளைகளில் தான் கொண்டிருப்பதாக கூறினார்.
இதுபற்றி பின்னர் சிநேகனிடம் பேசும் அனிதா, "ஜூலியின் இந்த பிராது ஜெயிக்காது, இருப்பினும் நான் இதை என் பற்றிய சில விஷயங்களை தெளிவு படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்" என பேசியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அதே சமயம் அனிதா துல்லியமாகவும் லாஜிக்காகவும் தான் பேசுகிறார், அதில் ஸ்ட்ராட்டஜி இருந்தால் அதையே தான் பாலாஜியும் பண்ணுகிறார், பிறகு ஏன் அனிதாவை மட்டும் விமர்சிக்கிறார்கள் ? என்று அனிதா ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர்.
இதனிடையே மற்றவர்கள் ரிஜிஸ்டர் பண்ணுகிறார்கள், பழி போடுகிறார்கள், பின்னால் பேசுகிறார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
ஆனால் அப்படி இருப்பது ஸ்டார்ட்டஜி, கேம் அல்லது தன் விளக்கம் என்றெல்லாம் தமக்கென்று வரும் போது அனிதா சொல்லிக் கொள்வதாகவும், ஆனால் அதையே அடுத்தவர்கள் செய்யும் போது, அதன் மீது அனிதா புகார் சொல்வதாகவும் ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே சில ரசிகர்கள், "ஜூலி பிராது ஜெயிக்காது என்றால், அனிதா தன் சொந்த விஷயத்துக்காக அந்த பிராதை ஜூலியிடம் கேட்டு பயன்படுத்தலாமா?" என்றும் கேட்டுள்ளனர்