கே எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் பாடலை இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி வெளியிட உள்ளார்.

Viral ஹிட் “அரபிக்குத்து” …. இப்ப இந்த மொழிகள்லயும் வந்துடுச்சு – வேற லெவல் update!
கூகுள் குட்டப்பா…
ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியாளர்களான சபரிசன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டத்தை சமீபத்தில் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பு…
இந்த படத்தில் நடிப்பது மட்டுமிலலாமல் தயாரிக்கவும் செய்துள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். கடைசியாக 22 ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் நடித்த தெனாலி படத்தை தயாரித்திருந்தார் கே எஸ் ரவிக்குமார். அதன் பின்னர் ’கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படத்தையும் தயாரிகக் உள்ளதாக கே எஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்…
இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மலையாளத்தில் சௌபின் சாஹர் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் ஊரில் தனிமையில் இருக்கும் தந்தைக்கு உதவி செய்வதற்காக ஒரு ரோபோவை கொடுத்து செல்கிறான். அதனோடு உணர்வுப் பூர்வமாக ஒன்றிபோகும் அந்த தந்தை அதனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றிய படமாக உருவாகியிருந்தது. நல்ல விமர்சனங்களையும் வசூலில் வெற்றியும் பெற்றது இந்த திரைப்படம்.
எஸ் எஸ் ராஜமௌலி வெளியிடும் பாடல்…
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான ’யாரோ யாரோ’ என்ற பாடல் ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பாடலை இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அடடே.. Beast ஷாப்பிங் மால் Set-க்கு பின்னாடி இவ்ளோ இருக்கா… கலை இயக்குனர் Exclusive பேட்டி