"யாரும் கவலப் படாதீங்க!".. வெளியே வந்ததும் ஐக்கியுடன் சேர்ந்து தாமரை அக்காவின் முதல் LIVE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது கடைசி வாரத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

BiggBoss thamarai eliminated first live iykki berry video
Advertising
>
Advertising

BiggBossTamil5: இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒரு பெரும் எலிமினேஷனாக தாமரையின் எலிமினேஷன் இருந்தது. கிராமத்தின் பின்னணியில் இருந்து வந்து நாடகக்கலைஞராக மலர்ந்த தாமரை, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

BiggBoss thamarai eliminated first live iykki berry video

நானும் ஏமாற்றம் அடைந்தேன்

அவர் வெளியேறும்போது கமல்ஹாசன் பேசும்போது, “உங்களை போன்றோரை இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற வைத்திருந்தால், எளிமையான இடத்தில் இருந்து வந்த யார் வேண்டுமானும் இங்கு வெற்றி பெற முடியும்! என்கிற நம்பிக்கை அனைவருக்கும் கிடைத்திருக்கும், ஆனால் ஓட்டு போட்டு சிலர் அதற்காக தாமதமாக வருத்தப்பட செய்யலாம். நானும் உங்களை தான் எதிர்பார்த்தேன், ஏமாற்றம் அடைந்தேன், அதனால் கொந்தளிக்கிறேன்” என கூறினார். 

ஐக்கி பெர்ரி - தாமரை நேரலை

இந்நிலையில் ஐக்கி பெர்ரியும் தாமரையும் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினர். அந்த உரையாடலில், ஐக்கி பெர்ரி தாமரையை மிகவும் மிஸ் பண்ணியதாக கூறினார். இதேபோல் தாமரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து ஐக்கி எலிமினேட் ஆனதுமே தானும் அவரை மிகவும் மிஸ் பண்ணியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அந்த வீடியோவில், நேரலையில் தாமரை தனக்கு ஓட்டு போட்ட ரசிகர்களுக்கு நன்றி சொன்னதுடன், “நான் எலிமினேட் ஆனதால் யாரும் கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல இருங்கள். நான் உங்கள் வீட்டு பிள்ளை. சிலர் வருத்தமுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

நான் ஜெயிச்சுட்டு வந்த மாதிரி தான்!

உங்களால்தான் இதுநாள் வரையில் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தேன். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்று அன்பு வார்த்தைகளை கூறினார். அத்துடன், ‘நான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வந்ததே ஜெயிச்சுட்டு வந்த மாதிரிதான், நான் ஜெயிச்சுட்டுதான் வந்துருக்கேன், எனவே கவலைப் படாதீங்க’ என கூறினார்.

"யாரும் கவலப் படாதீங்க!".. வெளியே வந்ததும் ஐக்கியுடன் சேர்ந்து தாமரை அக்காவின் முதல் LIVE வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss thamarai eliminated first live iykki berry video

People looking for online information on Biggboss 5 tamil, BiggBoss5, BiggBossTamil5, Eliminated, Iykki Berry, Thamarai live video, Thamarai Selvi, Thamarai Selvi nadagam will find this news story useful.