போடு வெடிய.! வந்தாச்சு BIGG BOSS 6 ப்ரோமோ.. கூடவே இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன் வெற்றியின் காரணமாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல தெலுங்கு டிவி சேனலில் ஒளிபரப்பாகும் பீஸ்ட்.. அதுவும் இந்த நாள்ல.. இந்த டைம்ல! போடு வெடிய

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான டாஸ்க்குகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராகவும் அறியப்படுவார்கள். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் ஹைலைட்டாக இருந்தது.

அந்த வகையில், தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை ஐந்து சீசங்கள் முடிவடைந்துள்ளது. இது போக, 24 மணி நேரமும் நேரலை செய்யப்பட்டு வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாகி வந்தது. இதன் ஆரம்பத்தில், நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வந்ததையடுத்து, மீதி நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்திருந்தார்.

முன்னதாக, ஐந்தாவது பிக்பாஸ் சீசனின் வெற்றியாளராக ராஜு அறிவிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என அதன் ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். அந்த வகையில், தற்போது ஆறாவது சீசன் குறித்த அசத்தலான ப்ரோமோ ஒன்றுடன் அதன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் ஒன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளியான ப்ரோமோ வீடியோவின் நடுவே, முந்தைய சீசனின் வெற்றியாளரான ராஜு தோன்றுகிறார். மேலும், அடுத்த பிக்பாஸ் சீசனில், யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் எப்படி அதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பது பற்றியும் அவர் கூறுகிறார்.

பொதுவாக, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தான் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். அப்படி இருக்கையில், முதல் முறையாக பொது மக்களுக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் வாய்ப்பு கிடைக்க உள்ளதால், அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.

Also Read | Bharathiraja: “என் இனிய டைரக்டரே..” பாரதிராஜா நலம் பெற பிரான்ஸ் தேவாலயத்தில் ராதிகா பிரார்த்தனை.!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss tamil season 6 promo about chances for people

People looking for online information on பிக்பாஸ், BIGGBOSS TAMIL, Biggboss tamil season 6 promo will find this news story useful.