தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
![Biggboss tamil 6 evicted contestants announced kamalhaasan Biggboss tamil 6 evicted contestants announced kamalhaasan](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/biggboss-tamil-6-evicted-contestants-announced-kamalhaasan-new-home-mob-index.jpg)
அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருவதால் ஏராளமான பஞ்சாயத்தும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.
இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது. தொடர்ந்து, இந்த டாஸ்க் முடிந்த பிறகு வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், வழக்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதம் குறித்து நிறைய கருத்துக்களையும் முன் வைத்திருந்தார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டி யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தோன்றி இருந்த முந்தைய எபிசோடில், அசீம், தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் Save செய்யப்பட்டதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்றைய எபிசோடிலும் பல்வேறு விஷயங்களை போட்டியாளர்களிடையே உரையாடி இருந்தார் கமல்ஹாசன். அப்படி ஒரு சூழலில், கடைசியில் நாமினேஷன் பட்டியலில் மணிகண்டா ராஜேஷ் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர்.
அப்போது, எலிமினேஷன் கார்டை கையில் வைத்துக் கொண்டு பேசிய கமல்ஹாசன், "மணிகண்டன்..... You are Safe" என்ற படி, அந்த கார்டில் ராபர்ட் பெயர் இருப்பதை பார்வையாளர்களிடம் காண்பித்தார். மணிகண்டன் என கூறி, ஒரு சிறிய ட்விஸ்ட் கலந்த இடைவெளியுடன் கமல்ஹாசன் சொன்னது அனைவரையும் சற்று பரபரப்பை எகிற வைத்திருந்தது.
தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டர் வெளியேறியதால் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் சிலர் மனமுடைந்து போயிருந்தனர்.