பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடி ENTRY கொடுத்த பாடகி சுசித்ரா.. டெரர் ப்ளானோடுதான் வந்துருக்காங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் பாடகி சுசித்ரா போட்டியாளர்களில் ஒருவராக இன்று என்ட்ரி ஆகிறார். இதை தொடர்ந்து அவர் வீட்டுக்குள் வர, போட்டியாளர்கள் பலவித ரியாக்‌ஷன் காட்டுகின்றனர். 

மேலும் உள்ளே வந்த சுசித்ரா, ''இந்த முறை போட்டி கடுமையாக இருக்கிறது. கொஞ்சம் வீட்டை ஆட்டி பார்க்கலாம் என்று இருக்கிறேன். இனிமே ஃபன் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil 4 new promo ft entry of singer suchitra

People looking for online information on BiggBoss Tamil 4, Suchithra will find this news story useful.