பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலரும் தமிழ் மக்களின் மனதில் நேரடியாக சென்று அமர்ந்திருக்கின்றனர்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர் சுஜா வருணி. ஏற்கனவே பல திரைப்படங்களில் இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் பரவலாக அறியப்பட்டார். அதன்பிறகு நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும் நடிகருமான சிவகுமார் என்பவரை சுஜா மணந்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை கூட உள்ளது.
பிக் பாஸ் சுஜா வருணியை பலரும் திரைப்படங்களில் காண முடியாமல் மிஸ் பண்ணுவதாக கூறி வந்த நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார். அதில் வலி தான் வளர்ச்சி. வளர்ச்சி தான் மாற்றம். மாற்றமே முக்கியம் என்கிற பொருள்பட ஆங்கிலத்தில் ட்வீட் செய்து இருக்கிறார்.
இதை பார்த்த பலரும் மிக உற்சாகமாக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். அவருடைய புகைப்படங்களை பாசிடிவாக காண்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து விட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், 2வது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது வரும் என்று பலரும் ஆவலாக உள்ளனர். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை அடிப்படையாக வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தற்போது சென்று கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் ஜோடிகளாக வந்து வேற லெவலில் கலக்கவிருக்கிறார்கள்.