பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் நடித்த இரண்டு ப்ரோமோ வீடியோ காட்சிகள் விஜய் டிவியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கு யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதுதான் அடுத்த கேள்வி.

தற்போது ஒரு லிஸ்ட் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் 15 நபர்கள் தான் நம்மை அடுத்து வரும் 100 நாட்களுக்கு நம்மை மகிழ்விக்க இருப்பதாக தெரிகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பிக் பாஸ் சீசன் 4-ல் இம்முறை ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜிதன் ரமேஷ், ஆரி, அனு மோகன், விஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன் ஆகியோர் உள்ளனர். எனினும் இது நூறு சதவீதம் உண்மையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்