நடிகை ஷெரின், தனுஷ் நடித்துள்ள ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார்.
துள்ளுவதோ இளமை படத்தைத் தொடர்ந்து, விசில் படத்தில் நடித்ததன் மூலம் ஷெரின் இன்னும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஷெரின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு புகழ்பெற்றார். பின்னர் தன் உடல் எடையை குறைத்து இன்னும் ஸ்லிம்மாகி அசத்தினார்.
இந்நிலையில் தான் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளராக அறியப்பட்டவருமான ஷெரின் தமக்கு கொரோனா பாசிடிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், தம்மை சந்தித்தவர்களுக்கு ஒரு அறிவிப்பு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷெரின் பதிவிட்டுள்ள வீடியோவில, “துரதிர்ஷ்டவசமாக எனக்கு கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் எனக்கு அப்படி வருவதற்கு வாய்ப்பே இல்லை. எங்க இருந்து வந்ததுனே தெரியல.. நான் கொரோனா பரவியதற்கு வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் என்னுடன் சிலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். சிலர் பாண்டிச்சேரியில் சந்தித்தீர்கள். தயவு செய்து தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள், பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.