VIDEO: “அசால்டா இருந்தேன்.. எனக்கே வந்துடுச்சு .. கொரோனா ஒரு டேஞ்சரஸ் ஃப்ளோங்க.. நடிக்கலங்க!” - SENDRAYAN!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சென்றாயன் மூடர் கூடம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அதன் பிறகு பஞ்சுமிட்டாய் எனும் திரைப்படத்தில் மா.கா.பாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சென்சேஷனல் புரோகிராமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சென்றாயன் இன்னும் கொஞ்சம்  தமிழக மக்களிடையே அதிகமாக பிரபலமானார். தவிர பல படங்களில் நடித்துவந்த சென்றாயனுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆவி பிடித்த பின்பு பேசிய சென்றாயன், “வணக்கம் மக்களே. நான் நடிக்கல. உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்.  வாழ்க்கையில ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும் என எப்பவுமே வாழ்க்கையை பாசிடிவாகவே பார்ப்பவன் நான். ஆனா எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு.. ஆரம்பத்துல கொரோனா குருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது. என் வீட்டில் நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர்.

மனைவி மட்டும் அவ்வப்போது உணவு கொடுக்க வருவார். அதனால் கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ.. மக்களே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தைகளை கூறியதுடன், தங்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கியதற்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

VIDEO: “அசால்டா இருந்தேன்.. எனக்கே வந்துடுச்சு .. கொரோனா ஒரு டேஞ்சரஸ் ஃப்ளோங்க.. நடிக்கலங்க!” - SENDRAYAN! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss sendrayan tested positive says about covid video

People looking for online information on Covid19, Sendrayan will find this news story useful.