பிக்பாஸ் TITLE WINNER இவரா..?.. கருத்துக் கணிப்பு சொல்வது என்ன? .! BIGG BOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் யார்? என்பது குறித்து நமது Behindwoods சேனல் POLL ஒன்றை நடத்தி வருகிறது. ரசிகர்கள் ஆர்வத்துடன் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

BiggBoss season 6 Winner Prediction Poll status
Advertising
>
Advertising

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன், கதிர் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

BiggBoss season 6 Winner Prediction Poll status

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பணப் பெட்டியுடன் அமுதவாணன் வெளியேற, மிட் வீக் எவிக்ஷன் மூலமாக மைனாவும் வெளியேறினார். தற்போதைய சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இன்று மாலை Finale நடைபெற இருப்பதால் வெற்றியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் நமது Behindwoods சேனல் ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் யார்? என்பதை கணிக்கும் விதத்தில் POLL ஒன்றை நடத்தி வருகிறது. இதில், ரசிகர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்கு செலுத்தியும் வருகின்றனர்.

தற்போதைய நிலையில் இதில் கலந்துகொண்ட மக்களில் விக்ரமனுக்கு 47.3 சதவீதமானோரும் அசீமுக்கு 41.6 சதவீத மக்களும் ஷிவினுக்கு ஆதரவாக 11 சதவீத மக்களும் வாக்கு அளித்துள்ளனர்.  தற்போதைய நிலையில் இந்த POLL-ல் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு வாக்கு அளித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss season 6 Winner Prediction Poll status

People looking for online information on Azeem, Biggboss6Tamil, Poll, Shivin, Vikraman will find this news story useful.